காதலர் தினத்தில் என்னுடன் டேட்டிங் செய்ய வேண்டுமா? பெண்களுக்காக இளைஞன் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

Report Print Santhan in ஏனைய நாடுகள்

நியூசிலாந்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் காதலர் தினம் வர இருப்பதால், தன்னுடன் டேட்டிங் செய்ய விரும்புவோர் குறிப்பிட்ட தொகை கொடுத்து டேட்டிங் செய்து கொள்ளலாம் என்று குறிப்பிட்டுள்ளது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நியூசிலாந்தைச் சேர்ந்தவர் Peter Wilding. இவர் சமீபத்தில் தன்னுடைய பேஸ் புக் பக்கத்தில் வெளியிட்டிருந்த பதிவு தான் இப்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகிறது.

அதில், காதலர் தினம் வரவிருப்பதால், டேட்டிங் செய்ய விரும்பும் பெண்கள் தன்னுடன் டேட்டிங் செய்து கொள்ளலாம் என்று குறித்து ஒரு மணி நேரம், இரண்டு நேரம் என பத்து விதமான பேக்கேஜ்களை அறிமுகப்படுத்தியுள்ளார்.

முன்பதிவு செய்ய விரும்புவோர் உடனடியாக முன்பதிவு செய்து கொள்ளுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார். அதில், காலையில் ஒரு மணி நேரம் மட்டும் என்றால் 15 டொலர் எனவும், அதுவே இரண்டு மணி நேரம் என்றால் 30 டொலர் என்றும், இந்த பேக்கேஜில் நீங்கள் என் கையை பிடித்து கொண்டு வரலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

உங்களுடன் ரோமேண்டிக் டின்னர்(2 மணி நேரம்) வேண்டும் என்றால் 45 டொலர், மாலை நேரத்தில் 4 மணி நேரம் உங்களுடன் இருக்க வேண்டும்(லவ் பேர்ட்ஸ் கோம்போ பேக்) 75 டொலர் இந்த பேக்கேஜை நீங்கள் பயன்படுத்தினால் பொது இடத்தில் என்னுடன் ஜாலியாக நடந்து செல்லலாம், முத்தம் கொடுக்கலாம்.

15 மணி நேரம்(ஓவர் நைட் காம்போ) 150 டொலர், இதில் உங்களை பிக் அப் பண்ணுவது முதல் அனைத்தும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இது போன்று இன்னும் சில பேக்கேஜ்களையும் கொடுத்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers