பொதுமக்களின் மீது சரிந்து விழுந்த ஏழு மாடி கட்டிடம்! நெஞ்சை பதற வைக்கும் வீடியோ

Report Print Kabilan in ஏனைய நாடுகள்

துருக்கியில் ஏழு மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.

இஸ்தான்புல் நகரில் உள்ள கர்தால் மாவட்டத்தில் இருந்த ஏழு மாடி கட்டிடம், நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென பொதுமக்களின் மீது இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 3 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவித்தன.

பின்னர் மேலும் 11 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில், இந்த விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது என மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த கோர விபத்து குறித்து மீட்புக்குழு அதிகாரிகள் கூறுகையில், ‘கட்டிடம் இடிந்து விழுந்ததில் இதுவரை 21 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன’ என தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில் அந்நாட்டு ஜனாதிபதி எர்டோகன், விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers