சிறுத்தையிடம் சிக்கி உயிருக்கு போராடிய குட்டி! துணிச்சலாக செயல்பட்டு காப்பாற்றி Honey Badger வீடியோ

Report Print Santhan in ஏனைய நாடுகள்

தென் ஆப்பிரிக்காவில் ஹனி பேட்ஜர் என்ற விலங்கு தன் குட்டியை சிறுத்தையிடமிருந்து துணிச்சலாக போராடி காப்பாற்றிய சம்பவத்தின் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

தென் ஆப்பிரிக்காவின் Kruger-வில் இருக்கும் தேசிய பூங்கா ஒன்றில் கீரி வகைகளில் ஒன்றான Honey Badger தன் குட்டியை ஓரிடத்தில் வைத்துவிட்டு உணவு தேடி சென்றுள்ளது.

அப்போது அந்த குட்டியைக் கண்ட சிறுத்தை ஒன்று, உடனடியாக அதை தாக்கி தன்னுடைய பசிக்கு இரையாக்க முயல்கிறது.


இதைக் கண்ட தாய் உடனடியாக மின்னல் வேகத்தில் வந்து சிறுத்தையை ஆக்ரோசமாக தாக்குகிறது. உடனே சிறுத்தை அதிடமிருந்து பயந்து ஓடுகிறது.

அதன் பின் காயம்பட்ட தன் குட்டியை அரவணைத்து கொள்ளும், தாய் ஹனி பேட்ஜர் நின்று கொண்டிருந்த சிறுத்தையை நோக்கி கத்துகிறது.

இந்த காட்சியை அங்கிருந்த நபர் வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார். கீரி வகைகளில் ஒன்றான ஹனிபேட்ஜரைக் கண்டால் சிங்கங்கள் கூட பயப்படுமாம். இவை அதிகமாக ஆப்ரிக்கா மற்றும் தெற்கு ஆசியாவில் அதிகம் காணப்படும் என்று கூறப்படுகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers