கண்ணீர் சிந்திய உலகம்.... சாலாவின் வருகைக்காக காத்திருக்கும் அவரது செல்ல நாய்: உலுக்கும் புகைப்படம்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

அர்ஜென்டினா நாட்டின் நட்சத்திர கால்பல்ந்து வீரர் எமிலியானோ சாலாவின் மரணம் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது வருகையை எதிர்பார்த்து காத்திருக்கும் அவரது செல்ல நாயின் புகைப்படம் வெளியாகி கலங்க வைத்துள்ளது.

கார்டிஃப் சிட்டி கால்பந்து அணியின் புதிய வரவான அர்ஜென்டினா நாட்டின் எமிலியானோ சாலா பயணம் மேற்கொண்ட குட்டி விமானம் விபத்துக்குள்ளான நிலையில்,

சமீபத்தில் கண்டெடுக்கப்பட்ட விமான பாகங்களுக்கிடையே சிக்கியிருக்கும் சடலம் சாலாவின் உடலாக இருந்துவிடக் கூடாது என அவரது ரசிகர்கள் உருக்கமாக பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

விபத்துக்குள்ளான விமானத்தில் சடலம் ஒன்று சிக்கியிருப்பதாக பிரித்தானியாவை சேர்ந்த விமான விபத்துகள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் குழுவே உறுதி செய்துள்ளது.

கடலுக்கடியில் சிக்கியுள்ள விமானத்தில் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சாலாவின் குடும்பத்தினரிடமும், விமானி டேவிட்டின் குடும்பத்தாரிடமும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

ஆனால் குறித்த சடலம் தொடர்பில் இதுவரை உறுதியான தகவலை அதிகாரிகள் வெளியிடவில்லை.

ஜனவரி 21 ஆம் திகதி பிரான்ஸ் நாட்டில் இருந்து கார்டிஃப் நகருக்கு குட்டி விமானம் ஒன்றில் பயணம் மேற்கொண்டுள்ளார்.

பயணத்தினிடையே மாயமான விமானம் தொடர்பில் உத்தியோகப்பூர்வ தேடுதல் முடித்துக் கொண்ட நிலையில் கால்பந்து ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க சாலாவின் குடும்பமே சொந்த செலவில் தேடுதலை முன்னெடுத்துள்ளது.

தொடர்ந்து நடைபெற்ற தீவிர தேடுதலில் விபத்துக்குள்ளான விமானத்தின் பாகங்களையும், அதனுள்ளே சடலத்தையும் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த நிலையிலேயே சாலாவின் சகோதரி ரோமினா, பகிர்ந்துகொண்ட புகைப்படம் உலக கால்பந்து ரசிகர்களை மீண்டும் கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது.

தமது சகோதரர் ஒரு போராளி எனவும், அவர் திரும்பி வருவார் என நம்புவதாகவும் குறிப்பிட்ட ரோமினா,

சாலாவின் செல்ல நாய் நாலாவின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளதே தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...