நடுவானில் தீப்பிடித்து எரிந்த விமானம்: வாய்விட்டு அலறிய பயணிகள்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

பனாமா நகரத்தில் இருந்து குவாதமாலா நோக்கி சென்ற விமானம் ஒன்று நடுவானில் தீப்பற்றி எரிந்த சம்பவம் அதில் இருந்த பயணிகளை உயிர் பயத்தில் அலற வைத்துள்ளது.

பூமியில் இருந்து ஆயிரக்கணக்கான மீற்றர்கள் மேலே, நடுவானில் நாம் பயணிக்கும் விமானத்தின் இயந்திரம் ஒன்று தீப்பிடித்து எரிவதை நம் கண்ணால் கண்டும் எதுவும் செய்ய முடியாமல் போவது, கண்டிப்பாக ஒவ்வொரு பயணிக்கும் அது வாழ்க்கையில் கெட்ட கனவாகவே நீடிக்கும்.

அப்படியான ஒரு திகில் சம்பவம் கடந்த ஜனவரி மாதம் 31 ஆம் திகதி சீசர் லூசியானோ என்ற பயணிக்கு ஏற்பட்டது.

பனாமா நகரத்தின் டோகூமன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து குவாதமாலா நகரம் நோக்கி கோபா விமான சேவை நிறுவனத்தின் விமானம் ஒன்று புறப்பட்டு சென்றுள்ளது.

குறித்த விமானமானது ஆயிரக்கணக்கான மீற்றர் உயரத்தில் சென்றுக் கொண்டிருக்கும்போது அதன் ஒரு இயந்திரத்தில் பறவை ஒன்று மோதியுள்ளது. இதில் அந்த இயந்திரம் தீப்பிடித்து எரிந்துள்ளது. இதை அப்போது அந்த விமானத்தில் பயணம் செய்த சீசர் லூசியானோ என்பவர் படம் பிடித்து சமூக வலைதளத்தில் பதிவேற்றியுள்ளார்.

மேலும், அந்த ஒருசில விநாடிகளில் எனக்குள் பல எண்ணங்கள் தோன்றி மறைந்தது என குறிப்பிட்டுள்ள சீசர், திரைப்படங்களில் மட்டுமே இதுபோன்ற காட்சிகளை தாம் பார்த்துள்ளதாகவும் அதில் தெரிவித்துள்ளார்.

மட்டுமின்றி அப்போது தமது மனதில் தோன்றிய எண்ணங்களை இங்கே குறிப்பிட விரும்பவில்லை எனவும் சீசர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே சுதாரித்துக் கொண்ட விமானி உடனடியாக புறப்பட்ட இடத்திற்கே விமானத்தை திருப்பி விட்டுள்ளார்.

விமானம் பத்திரமாக தரையிறங்கியதாகவும் பயணிகளுக்கு எந்த அசம்பாவிதமும் நேரவில்லை எனவும் கோபா விமான சேவை நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers