விசா அதிகாரியை அறைந்த லண்டன் பெண்ணிற்கு சிறை…!

Report Print Abisha in ஏனைய நாடுகள்

இந்தோனேசியாவிற்கு வந்த லண்டனை சேர்ந்த பெண் ஒருவர் விசா அதிகாரியை தாக்கிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வலம் வந்த நிலையில் தற்போது அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

லண்டனை சேர்ந்த அவுஜ்-இ-தகஸ்தஸ் என்ற பெண் இந்தோனேசியாவின் பாலி விமான நிலையத்திலிருந்து லண்டன் செல்ல திட்டமிட்டு விமான டிக்கெட் பதிவு செய்துள்ளார். இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் விமான நிலையம் வந்த அவரை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அவர் விசா காலம் முடிந்து பல நாட்கள் ஆனதால் அவரிடம் விசாரணை மேற்கொண்டு அபராதம் கட்டும்படி கூறியுள்ளனர். தொடர்ந்து ஒரு அதிகாரி அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தியதால் அந்த பெண் விமானத்தை தவறவிட்டதாக கூறப்படுகிறது. இதில் கோவம் கொண்ட அந்த பெண் அதிகாரியை தாக்கினார்.

இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியதை அடுத்து அதிகாரி அளித்த புகாரின் பேரில் விசாரணை நடைபெற்றது. மேலும் அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிகம் பரப்பப்பட்டது.

இது குறித்த வழக்கு விசாரணை இந்தோனேசிய நீதிமன்றத்தில் நடைபெற்றது. 7 மாதங்கள் நடந்த விசாரணையில், அந்த பெண்ணுக்கு தற்போது 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers