கர்ப்பிணி மனைவியை கொல்ல முயன்று தனது உயிரை விட்ட கணவன்: பரபரப்பு சம்பவம்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

கர்ப்பிணி மனைவியை கத்தியால் கணவன் குத்திய நிலையில் அவர் உயிர் பிழைத்தார், ஆனால் இதன் பின்னர் கணவர் தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கென்யாவை சேர்ந்தவர் டேனியல் (28). இவர் மனைவி அடினோ. இவர் மூன்று மாதம் கர்ப்பமாக இருந்தார்.

இந்நிலையில் நேற்று காலை மனைவி மீது திடீரென ஆத்திரப்பட்ட டேனியல் அவரை கத்தியால் சரமாரியாக குத்தினார்.

பின்னர் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அடினோவின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வரும் நிலையில் வயிற்றில் உள்ள குழந்தை உயிரோரு இருப்பதாக தெரியவந்துள்ளது.

இது குறித்து டேனியல் உறவினர்கள் கூறுகையில், டேனியலும், அடினோவும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார்கள்.

அவர்களுக்குள் எந்தவொரு பிரச்சனையும் வந்ததில்லை, திடீரென ஏற்பட்ட சண்டையால் டேனியல் இப்படி செய்திருக்கலாம் என கருதுகிறோம் என கூறியுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக பேசிய பொலிசார், தம்பதிக்குள் என்ன பிரச்சனை ஏற்பட்டது என சிகிச்சையில் உள்ள அடினோ கண்விழித்து சொன்ன பின்னரே எங்களால் தெரிந்து கொள்ள முடியும் என கூறியுள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers