ஒரே நேரத்தில் ஹெட் போன்..சார்ஜ் போட்டு பேசிய இளைஞனுக்கு நேர்ந்த பரிதாப நிலை! வெளியான புகைப்படங்கள்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

தாய்லாந்தில் காதில் ஹெட்போன் மாட்டிக் கொண்டு, அதன் பின் சார்ஜ் போட் போனில் பாட்டு கேட்டுக் கொண்டிருந்த இளைஞன் பரிதாபமாக இறந்துள்ளார்.

தாய்லாந்தின் Chonburi பகுதியைச் சேர்ந்தவர் Chonburi. 24 வயதான இவர் அங்கிருக்கும் தொழிற்சாலை ஒன்றில் ஊழியராக வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் இவர் கடந்த சனிக்கிழமை காதில் ஹெட் போன் மாட்டிக் கொண்டு பாட்டு கேட்டுள்ளார். அதுமட்டுமின்றி ஹெட் போனின் மைக் பகுதியை வாயில் வைத்துக் கொண்டு பேசியுள்ளார்.

அதன் பின் போனில் சார்ஜ் குறைந்ததால், சாதரண ஜார்ஜ் போட்டுவிட்டு மீண்டும் பாட்டு கேட்டு தூங்கியுள்ளார்.

மறுநாள் காலை வீட்டின் உரிமையாளர் அவரின் வீட்டிற்கு வந்த போது, அவரின் இரண்டு காதுகளும் தீயில் கருகியது போன்று இருந்து, அசைவற்ற நிலையில் கிடந்துள்ளார்.

இதனால் உடனடியாக இது குறித்து பொலிசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில், விரைந்து வந்த பொலிசார், அவரின் உடலை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். அவரின் இறப்புக்கு முக்கிய காரணம் சார்ஜ் போட்டு, ஹெட் போன் மாட்டிக் கொண்டே தூங்கியது தான் என்று கூறியுள்ளனர்.

அதுமட்டுமின்றி அவர் கம்பெனி சார்ஜர் பயன்படுத்தாமல், விலை மலிவாக கிடைக்கும் சார்ஜரை பயன்படுத்தியுள்ளார், அதில் இருக்கும் சர்க்குயூட்கள் வேறு மாதிரி இருக்கும் அதுவும் ஒரு வகை காரணம் என்று கூறப்படுகிறது.

அவர் வீட்டில் பயன்படுத்திய சார்ஜர் போன்றவை தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers