மகளை கர்ப்பமாக்கிவிட்டு அவருடனேயே ஓட்டம் பிடித்த தந்தை: கதறிய மனைவி

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

ஜிம்பாப்வேயில் மனைவியை தவிக்கவிட்டு வளர்ப்பு மகளுடன் ஓட்டம் பிடித்த கணவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜீகாஸ் முகுர்சாஸ் (32) என்பவர் பினிங்கு (37) என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தார்.

பினிங்குவுக்கு, ஜீகாஸ் இரண்டாவது கணவராவார். முதல் கணவர் மூலம் அவருக்கு மெக்லோலின் (18) என்ற மகள் உள்ளார்.

இந்நிலையில் தனது மாற்றாந்தந்தை ஜீகாஸுடன், மெக்லோலினுக்கு தவறான தொடர்பு ஏற்பட்டது.

இதையடுத்து இருவரும் நெருங்கி பழகியதால் ஜீகாஸ் கர்ப்பமானார். இந்நிலையில் மனைவி பினிங்குவை தவிக்க விட்டு விட்டு ஜீகாஸ், மெக்லோலினுடன் ஓட்டம் பிடித்தார்.

இதையறிந்து அதிர்ச்சியடைந்த ஜீகாஸ் மனைவி பினிங்கு இது குறித்து பொலிசில் புகார் அளித்த நிலையில் பொலிசார் இருவரையும் கண்டுப்பிடித்து கைது செய்தனர்.

அவர்கள் மீதான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இதையடுத்து இருவரும் தனித்தனியாக அங்குள்ள பள்ளிகளில் 210 மணி நேரங்கள் சமூக சேவை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்