கால்நடைப் பண்ணைபோல் குழந்தைகள் பண்ணை நடத்திய நபர்! வாக்குமூலம் கொடுத்த பெண் தற்கொலை

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

பிரேசிலில் தெய்வீக முறையில் நோய்களை குணமாக்குவதாக கூறிவந்த ஒரு நபர் பொலிசில் சிக்கியுள்ள நிலையில், அவர் பாலியல் அடிமைப் பண்ணை நடத்தி வருவதை வெளியுலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டிய ஒரு பெண் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Joao de Deus (77) என்னும் நபர் தெய்வீக முறையில் நோய்களை குணமாக்குவதாக கூறி தனது சொந்த மகள் உட்பட 300 பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கைது செய்யப்பட்ட நிலையில் Sabrina Bittencourt (38) என்னும் பெண் அவர்மீது கற்பனை கூட செய்து பார்க்க முடியாத பயங்கர புகார் ஒன்றை அதிரடியாக முன்வைத்தார்.

அந்த செய்தியைக் கேட்டு உலகமே அதிர்ந்துள்ளது. Joao பாலியல் அடிமைப் பண்ணை ஒன்றை நடத்தி வருவதாக அதிபயங்கர புகார் ஒன்றை வெளிப்படையாக தெரிவித்தார் Sabrina.


அதாவது Joao நடத்திவந்த ஆஸ்ரமத்திலுள்ள இளம்பெண்களை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கி, அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளை கருப்புச் சந்தையில் விற்றுவிடுவதாக புகாரளித்திருந்தார் Sabrina.

அதோடு நின்றுவிடாமல், பத்து ஆண்டுகள் குழந்தை பெற்றதும் அந்த பெண்கள் கொலை செய்யப்பட்டு விடுவார்களாம்.

Sabrinaவின் குற்றச்சாட்டையடுத்து Joao கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வளவு ஒரு பெரிய புகாரை வெளிப்படையாக தெரிவித்ததால் Sabrinaவுக்கு கொலை மிரட்டல்கள் வந்தன.

இதனால் அவர் ஒரு பாதுகாப்பான இடத்தில் பத்திரமாக வைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் திடீரென Sabrina தற்கொலை செய்து கொண்டதாக அவரது மகன் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Joao சிறை சென்றதற்கு முக்கிய காரணமாக இருந்த Sabrina எந்த காரணமும் தெரிவிக்காமல் தற்கொலை செய்து கொண்டது மேலும் சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்