ஒரே இடத்தில் நரபலி கொடுக்கப்பட்ட நூற்றுக்கணக்கான குழந்தைகள்: அதிர்ச்சி சம்பவம்!

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

பெரு நாட்டின் வடக்கு கரையோர பகுதியில் உள்ள ஹூனாஹிகிடோவில் நூற்றுக்கும் அதிகமான குழந்தைகள் எலும்புகளாக கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹூனாஹிகிடோ பகுதியில் உள்ளுறை சேர்ந்த நாய் ஒன்று, எலும்பு ஒன்றினை கண்டெடுத்துள்ளது. இதனை பார்த்த மக்கள் முன்னொரு காலத்தில் அங்கு கல்லறைகள் இருந்திருக்கலாம் என நம்பியிருக்கின்றனர்.

இதற்கிடையில் தகவலறிந்து வந்த தொல்பொருள் ஆய்வாளர்கள் அப்பகுதியில் தோண்டி எடுத்தபோது, டஜன் கணக்கில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதனையடுத்து ஆராய்ச்சியை தீவிரப்படுத்த ஆரம்பித்தினர். கடலிலிருந்து ஆயிரம் அடி குறைவான பகுதியில் நூற்றுக்கணக்கான குழந்தைகளின் எலும்புகளை கண்டறிந்தனர்.

அந்த குழந்தைகள் அனைவருமே 5 முதல் 14 வயதிற்குட்பட்டவர்கள் என்பது கதிரியக்க சோதனையின் மூலம் கண்டறியப்பட்டது.

மேலும், 550 ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் புதைப்பட்டிருக்கலாம் என்பதை கண்டறிந்தனர். அவர்களுடைய உடலில் இருந்த சடங்கு அடையாளங்களை வைத்து அவர்கள் அனைவரும் நரபலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

அதேபோல மற்றொரு தளத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 269 குழந்தைகளின் எலும்புகளை ஆராய்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ளனர். புராதன சிம்ம நாகரீகத்தின் தலைநகரான சான் சான் தான், உலகிலேயே குழந்தைகள் அதிகமாக நரபலி கொடுக்கப்பட்ட இடம் என ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

அவர்களின் சடலங்களுடன் சேர்த்து 466 ஆடுகளும் புதைக்கப்பட்டுள்ளன. உணவு மற்றும் போக்குவரத்து ஆதாரங்களாக மிகவும் விலையுயர்ந்ததாக கருதப்பட்ட விலங்குகளையும் பலி கொடுத்திருப்பது, கடவுள்களுக்கு ஒரு பாரிய தியாகத்தை செய்வதற்காக இருக்கலாம் என சான்றுகள் தெரிவிக்கின்றன.

இவர்களில் மூன்று எலும்புக்கூடுகள் மட்டும் வயதில் பெரியவர்களின் எலும்புக்கூடுகளாக உள்ளன. அதில் இருந்த இரண்டு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சிறுவர்களை புதைக்கும் வேலையை செய்திருக்கலாம் எனவும், புதைக்கப்பட்டிருந்த ஆண், நரபலி கொடுத்தவராக இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.

இத்தனை குழந்தைகள் அந்த காலத்தில் நரபலி கொடுக்கப்பட்டதற்கான தெளிவான காரணங்கள் கண்டறியப்படவில்லை.

கடுமையான மழையை பொருட்படுத்த முடியாமல் அதனை தடுத்து நிறுத்துவதற்காக நரபலி கொடுத்திருக்கலாம் என என்பதற்கான சான்றுகள் முதல் தளத்தில் இருந்து கிடைத்துள்ளன.

இதுகுறித்து ட்ருஜிலோ தேசிய பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் தொல்லியல் துறை பேராசிரியர் காபிரியேல் ப்ரிட்டோ கூறுகையில், குழந்தைகள் மற்றும் விலங்குகள் அனைத்தின் இதயமும் வெளியில் எடுக்கப்பட்டு நரபலி கொடுக்கப்பட்டிருப்பதாகவும், அதற்கான தடயங்கள் ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...