பயணிகளுடன் பனிப்பாறையில் மோதி வெடித்து சிதறிய ஹெலிகாப்டர்: அதிர்ச்சி வீடியோ!

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

இத்தாலியில் சுற்றுலா பயணிகளின் சென்ற ஹெலிகாப்டர் பனிப்பாறையில் மோதி வெடித்து சிதறியதில் 5 பேர் பலியாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

வடமேற்கு இத்தாலியில் உள்ள ஆஸ்டா பள்ளத்தாக்கு பகுதியில் சுற்றுலா பயணிகளுடன் சென்ற ஹெலிகாப்டர் ஒன்று, காற்றில் நிலைகுலைந்து விபத்தில் சிக்கியுள்ளது.

இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்ததாகவும், இரண்டு பேர் காயமடைந்துள்ளதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

வீடியோவை காண ....

விபத்து சம்பவத்தை கேள்விப்பட்டு, தேசிய ஆல்பைன் கிளிஃப் மற்றும் குகை மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

அவர்களுடன் சேர்த்து ஒரு சிவில் பாதுகாப்பு ஹெலிகாப்டர் மருத்துவருடனும் மற்றொரு ஹெலிகாப்டர் தொழில்நுட்ப வல்லுனர்களுடனும் புறப்பட்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து மேலும் இரண்டு ஹெலிகாப்டர்கள், விபத்து நடந்த இடத்திற்கு அனுப்ப தயார் நிலையில் உள்ளன.

விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டரில் எதனை சுற்றுலா பயணிகள் சென்றனர் என்பது பற்றிய தகவல் இதுவரை வெளியாகவில்லை.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers