அல்லாஹு அக்பர் என கத்தியபடியே விமானத்தை கடத்த முயன்ற நபர்: விமானியின் அதிரடி முடிவு

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

வட ஆப்பிரிக்க நாடான துனிசியா நோக்கி பயணமாக விமானம் ஒன்றில் பயணி ஒருவர் அல்லாஹு அக்பர் என கத்தியபடியே விமானியின் அறைக்குள் நுழைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இருந்து துனிசியா நோக்கி பயணமாகியுள்ளது Transavia விமான சேவை நிறுவனத்தின் விமானம் ஒன்று.

இந்த விமானத்தில் பயணம் செய்த 30 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் திடீரென்று அல்லாஹு அக்பர் என கத்தியபடியே விமானியின் அறைக்குள் நுழைய முற்பட்டுள்ளார்.

இதனால் அதிற்சிக்குள்ளான பயணிகள் குறித்த நபரை குண்டுகட்டாக தூக்கி அப்புறப்படுத்தியுள்ளனர்.

மட்டுமின்றி விமானியிடம் நடந்த களேபரத்தை தெரியப்படுத்திய நிலையில், உடனடியாக விமானத்தை புறப்பட்ட விமான நிலையத்திற்கே திருப்பி விட்டுள்ளார்.

இதனிடையே விமான நிலையத்தில் விமான தரையிறங்கியதும் பொலிசார் அந்த நபரை கைது செய்துள்ளனர்.

குறித்த சம்பவத்தால் எஞ்சிய பயணிகள் அனைவரும் ஒரு இரவு முழுவதும் பிரான்ஸின் நைஸ் நகரில் தங்க வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

முதற்கட்ட விசாரணையில் அந்த நபருக்கு உளவியல் பிரச்னை இருக்கலாம் என தெரியவந்துள்ளது.

மட்டுமின்றி பாரிஸில் இருந்து விமானம் புறப்பட்டபோது அந்த நபர் இஸ்லாமிய முறைப்படி செபம் செய்யவும் முயன்றுள்ளதாக கூறப்படுகிறது.

அல்லாஹு அக்பர் என கத்தியபடியே விமானியின் அறைக்குள் நுழைய முனைந்தது, விமானத்தை கடத்தவா அல்லது வேறு காரணம் உள்ளனவா என விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers