நான் எதற்காக எனது தலைமுடியை சிறுநீரில் கழுவுகிறேன் தெரியுமா? வனவாசியாக மாறிய இளம்பெண்

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

வனவாசியாகிய தனது காதலருடன் வாழ்வதற்காக தனது ஆசிரியை வேலையை உதறிய ஒரு பெண், தான் எதற்காக தனது தலைமுடியை தினமும் சிறுநீரில் கழுவுகிறார் என்பது குறித்து விளக்கமளித்திருக்கிறார்.

எட்டு ஆண்டுகளாக தனது காதலரான பீற்றருடன் (64) வன வாழ்க்கையை மேற்கொண்டு வரும் மிரியம் (34), இணையம், மொபைல் போன்கள் குளிர்சாதன பெட்டி, கைக்கடிகாரங்கள், ஏன் மாதவிடாய் நேரங்களில் பயன்படுத்தும் சாதனங்கள் உட்பட பல விடயங்களை தியாகம் செய்து விட்டாலும், அவரால் ஒரே ஒரு விடயத்தை மட்டும் விட முடியவில்லை. அது தலைமுடிக்கு பயன்படுத்தும் ஷாம்பு.

காரணம் நீண்ட பயணங்களை மேற்கொள்ளும் மிரியம் எப்போதும் பொடுகுத் தொல்லையால் அவதிப்பட்டிருக்கிறார்.

இதையறிந்த மிரியமின் காதலரான பீற்றர், எஸ்கிமோக்கள் பொடுகுத் தொல்லையிலிருந்து விடுபடுவதற்காக காலை சிறுநீரில் தங்கள் தலைமுடியை அலசுவது உண்டு என்று கேள்விப்பட்டதாகக் கூற, தானும் அதை முயற்சி செய்யலாமே என முடிவு செய்திருக்கிறார் மிரியம்.

அதன்படி காலை எழுந்ததும் சிறுநீரால் தலைமுடியை நனைத்து விட்டு பின்னர் சோப்பினால் அலசியிருக்கிறார் அவர்.

என்ன ஆச்சரியம்! அவரது பொடுகு போயே போச்சு!

அது மட்டுமல்லாமல், தொலைக்காட்சி விளம்பரங்களில் உங்கள் டூத் பேஸ்டில் கரி இருக்கிறதா? என்று கேட்பதுபோல், உண்மையிலேயே பல் துலக்க கரியைத்தான் உபயோகிக்கிறார் மிரியம்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...