முத்தமிடத்தூண்டும் செவ்விதழ்களை கிளியோபட்ரா பெற்றது எப்படி: நீண்ட காலத்திற்குப்பின் வெளியான ரகசியம்

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

பார்த்தாலே முத்தமிட வேண்டும் என்று தூண்டும் அளவிற்கு அழகிய சிவப்பு நிற உதடுகளைக் கொண்டவர் என வரலாற்றில் புகழப்படுபவர் பேரழகி கிளியோபட்ரா.

அவர் தன் உதடுகளில் சிவப்பு நிற லிப்ஸ்டிக் அணிந்திருந்தார் என்பது தெரியும், ஆனால் அவருக்கு எங்கிருந்து லிப்ஸ்டிக் கிடைத்தது?

உதடுகளில் வர்ணம் பூசுவது மிக நீண்ட காலமாகவே பயன்பாட்டில் இருந்த நிலையில், அதற்கு ஒவ்வொரு காலகட்டத்தில் ஒவ்வொரு பொருள் கூறப்பட்டிருக்கிறது. எகிப்து ராணியான கிளியோபட்ராவை கவர்ச்சியாக காட்டிய அதே லிப்ஸ்டிக், கிரீஸ் நாட்டில், பாலியல் தொழிலாளிகள் மட்டுமே பயன்படுத்தும் ஒரு பொருளாகக் கருதப்பட்டது.

சொல்லப்போனால் லிப்ஸ்டிக் அணியாத பாலியல் தொழிலாளிகள், உயர் குடும்ப பெண்கள் போல் தங்களை காட்டிக் கொள்ள முயற்சிப்பதாக தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். 16ஆம் நூற்றாண்டில் லிப்ஸ்டிக் அணிவது ஒரு பாவச்செயலாக திருச்சபையால் கருதப்பட்டிருந்த நிலையில், முதலாம் எலிசபெத் மகாராணி, சபை கட்டுப்பாட்டை மீறி லிப்ஸ்டிக் அணிவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

லிப்ஸ்டிக்கில் மந்திர சக்தி இருப்பதாக கருதினாரம் அவர்.

ஆனால் அவரது லிப்ஸ்டிக்கில் பெருமளவில் வெள்ளீயம் சேர்க்கப்பட்டிருந்ததால், அது ஒரு ஸ்லோ பாய்சனாகி அவரது உயிரையே பறித்தது.

தடிமனாக லிப்ஸ்டிக் அணிந்தபடியே இறந்துபோன மகாராணியை, கடவுளுக்கு விரோதமாக லிப்ஸ்டிக் அணிந்ததால்தான் இறந்துபோனார் என குற்றம் சாட்ட சபை தவறவில்லை.

இன்னொருபக்கம் சர்வாதிகாரி ஹிட்லருக்கு சிவப்பு லிப்ஸ்டிக்கைக் கண்டாலே பிடிக்காதாம், தான் இருக்கும் சுற்றுவட்டாரத்தில் எந்த பெண்ணும் சிவப்பு நிற லிப்ஸ்டிக் அணிய அனுமதிக்கமாட்டாராம் அவர்.

எல்லாம் சரி, விடயத்திற்கு வருவோம், கி.மு.30இல் வாழ்ந்த கிளியோபட்ராவுக்கு லிப்ஸ்டிக் எங்கிருந்து கிடைத்தது?

கிளியோபட்ரா தனது லிப்ஸ்டிக்கை தானே தயாரிப்பாராம்.

மலர்கள், ocher என்னும் வேதிப்பொருட்களால் ஆன நிறமி, மீன் செதிள்கள், இவற்றுடன் எறும்புகளை சேர்த்து நசுக்கி அந்த கலவையுடன், carmine என்னும் நிறமி மற்றும் தேன் கூட்டிலிருந்து எடுக்கப்பட்ட மெழுகைக் கலந்து கிளியோபட்ராவின் சிவப்பு நிற லிப்ஸ்டிக் உருவாக்கப்பட்டது என வரலாற்றாளர்கள் தெரிவிக்கின்றார்கள்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்