கனடாவுக்கு தப்பி சென்ற மகள்கள்! மரண தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்ட பெண்ணின் தற்போதைய பரிதாப நிலை

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

பாகிஸ்தான் நாட்டில் தெய்வ நிந்தனை புகாரில் சிக்கி மரண தண்டனையில் இருந்து விடுவிக்கப்பட்ட கிறிஸ்தவ பெண்மணிக்கு அவரது கிராம மக்களால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் நாட்டில் தெய்வ நிந்தனை குற்றச்சாட்டில் சிக்கியவர் ஆசியா பீபி. கடந்த 2009 ஆம் ஆண்டு நடந்த இச்சம்பவத்தில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் சர்வதேச சமூகத்தின் தொடர் கோரிக்கையால் அவரை மரண தண்டனையில் இருந்து நீதிமன்றம் விடுவித்தது.

நீண்ட 8 ஆண்டுகள் சிறை வாசம் அனுபவித்த ஆசியா பீபி தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார். இருப்பினும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் அவர்து உயிருக்கு அச்சுறுத்தல் இருந்து வருகிறது.

இதனால் கடந்த இரண்டரை மாதங்களாக தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் 5 பிள்ளைகளுக்கு தாயாரான ஆசியா பீபி.

இதனிடையே இஸ்லாமிய அடிப்படைவாதிகள் கும்பல் ஒன்று வீடு வீடாக சென்று ஆசியா பீபியின் புகைப்படத்தை காண்பித்து அவரை வேட்டையாடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவரை கொல்லாமல் விடுவதில்லை எனவும் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர். மட்டுமின்றி ஆசியா பீபியை விடுவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் ஆசியா பீபியின் கணவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஆசியா பீபி மற்றும் அவரது கணவர் உள்ளிட்டவர்களை பாகிஸ்தான் பாதுகாப்பு படை ரகசிய பகுதி ஒன்றில் மறைவாக குடியமர்த்தியுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளாக ஆசியா பீபி தமது 5 பிள்ளைகளையும் பார்த்ததில்லை என கூறும் அவரது நலம் விரும்பிகள்,

ஆசியா பீபி சிறை மீண்ட பின்னரும் ஒரு கைதியாகவே வாழ்ந்து வருவதாக வருத்தம் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஆசியாவின் இரு மகள்கள் கனடாவுக்கு தப்பிச் சென்று அங்கே தஞ்சம் கோரியுள்ளதால் காப்பாற்றப்பட்டுள்ளனர் எனவும் அவரது நண்பர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers