வெளிநாட்டில் விபத்தில் சிக்கிய தமிழனின் நிலை என்ன? உயிருடன் வருவார் என்ற நம்பிக்கையில் குடும்பத்தினர்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

ரஷ்யாவில் எரிவாயு ஏற்றி சென்ற சரக்கு கப்பல் திடீரென்ற தீ விபத்தில் சிக்கியதால், அதில் பயணம் செய்த தமிழக இளைஞனின் நிலை தற்போது வரை தெரியாத காரணத்தினால், அவன் மீண்டும் திரும்பி வருவான் என்ற நம்பிக்கையில் குடும்பத்தினர் உள்ளனர்.

ரஷ்யாவின் மேற்கே உள்ள கிரிமியா தீபகற்பத்தின் எல்லை பகுதியான கிர்ச் ஸ்ரைட் கடலில் இருந்த சரக்கு கப்பலுக்கு எரிபொருள் தீர்ந்து போனதால், கடந்த 21-ஆம் திகதி அந்த கப்பலுக்கு எரிவாயு செலுத்தும் போது எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்து காரணமாக 14 பேர் பரிதாபமாக உடல் கருகி உயிரழந்தனர். மேலும் சிலர் உயிர் பிழைப்பதற்காக கடலில் குதித்ததால், அதிலிருந்து தற்போது வரை 14 பேர் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து ரஷ்யாவின் கப்பற்படை செய்தி தொடர்பாளர் அலெக்ஸி கிராவ்சென்கோ , விபத்தில் சிக்தி கடலில் குதித்தவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறியுள்ளார்.

இந்த தீ விபத்தில் மாயமானவர்களில் தமிழகத்தை சேர்ந்த இளைஞர்கள் பெயரும் இடம் பெற்றிருக்க்கிறது.

தஞ்சாவூரைச் சேர்ந்த அவினாஷ் (23) என்ற இளைஞர் ரஷ்யாவில் மெரைன் இன்ஜினியராக பணி புரிந்து வந்துள்ளார்.

இவரும் தீ விபத்து ஏற்பட்ட கப்பலில் பயணித்துள்ளார், ஆனால் அவரின் நிலைமை என்ன என்பது? இப்போது வரை தெரியவில்லை.

இதனால் அவரது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கவலையில் உள்ளனர். அவரின் நிலையைப் பற்றி தெரிவிக்கும் படி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

அவினாஷ் கட்டயாம் உயிருடன் தமிழகத்திற்கு திரும்பி வருவார் என அவரின் குடும்பத்தார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

அதே போல் விபத்தில் சிக்கிய மேஸ்ட்ரோ என்ற கப்பலில் கன்னியாகுமரி மாவட்டம் புத்தன்துறையைச் சேர்ந்த சகாயராஜ் என்பவரது மகன் செபாஸ்டின் பிரிட்டோ (24) பணியில் இருந்துள்ளார்.

விபத்தை தொடர்ந்து அவர் மாயமாகி விட்டதாகவும், அவரைத் தேடும் பணியில் ரஷ்ய கடற்படை ஈடுபட்டு வருவதாகவும் அவரது உறவினர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers