தேனிலவில் உயிரிழந்த இளம்தம்பதி.. இலங்கையிலிருந்து சொந்த ஊருக்கு சென்ற உடல்! உருக்கமான கோரிக்கை

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

மாலத்தீவுக்கு தேனிலவு சென்ற இடத்தில் உயிரிழந்த தம்பதியின் உடல் இலங்கையில் இருந்து சொந்த நாட்டுக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் தம்பதியின் உறவினர்கள் உருக்கமான கோரிக்கை வைத்துள்ளனர்.

பிலிப்பைன்ஸை சேர்ந்தவர் லியோமர். இவருக்கும் எரிகா என்ற பெண்ணுக்கும் கடந்த மாதம் 18-ஆம் திகதி திருமணம் நடந்த நிலையில் சமீபத்தில் இருவரும் மாலத்தீவுக்கு தேனிலவு சென்றனர்.

இந்நிலையில் அங்குள்ள கடலில் இருவரும் குளித்த போது லியோமர் திடீரென மூழ்க தொடங்கினார்.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் மனைவி எரிகா கணவரை காப்பாற்ற முயன்ற நிலையில் அவரும் நீரில் மூழ்கினார்.

பின்னர் இருவரையும் மீட்ட மீட்பு குழுவினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் இருவரும் ஏற்கனவே இறந்துவிட்டதை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

பிரேத பரிசோதனையில் லியோமர் திடீர் மாரடைப்பால் இறந்ததும், எரிகா நீரில் மூழ்கிய காரணத்தால் இறந்ததும் தெரியவந்தது.

இந்நிலையில் இருவரின் உடலும் நறுமணமூட்டிப் பாதுகாத்து வைக்கப்படுவதற்காக இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு பின்னர் கடந்த 19ஆம் திகதி பிலிப்பைன்ஸைக்கு கொண்டு செல்லப்பட்டது.

சம்பவம் தொடர்பான விசாரணைகள் முடிந்த நிலையில் நாளை உடல்கள் புதைக்கப்படவுள்ளது.

இந்நிலையில் தம்பதியின் உறவினர்கள் இது குறித்து கூறுகையில், சம்பவம் தொடர்பாக அரசு மேலும் விசாரணை நடத்தி நடந்ததை வெளிச்சம் போட்டு காட்ட வேண்டும்.

லியோமரும், எரிகாவும் தண்ணீருக்கு அடியில் படம்பிடிக்கும் கமெராவுடன் தான் நீரில் இறங்கினார்கள்.

அந்த கமெரா இன்னும் எங்கள் கையில் கிடைக்கவில்லை, அதில் நடந்த விடயங்கள் சரியாக பதிவாகியிருக்கும் என கூறியுள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers