சொந்த சித்தப்பாவை காதலித்து திருமணம் செய்த இளம்பெண்: நேர்ந்த விபரீத சம்பவம்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

கென்யாவில் சித்தப்பா என்று தெரியாமலேயே நபரை காதலித்த இளம்பெண் அவரை திருமணம் செய்த நிலையில் ஊரார் தம்பதியை பிரித்துள்ளனர்.

பிரயன் மொடிபா (32) என்ற நபருக்கு கிறிஸ்டினோ என்ற அண்ணன் இருந்தார். இளம் வயதிலிருந்து பிரயனும், கிறிஸ்டினோவும் தனித்தனியாக வளர்ந்தார்கள்.

கிறிஸ்டினோவுக்கு மகள் பிறந்த பின்னர் அவரின் மனைவி அவரை பிரிந்து சென்றுள்ளார். இந்நிலையில் இரு வருடங்களுக்கு முன்னர் கிறிஸ்டினோ உயிரிழந்துள்ளார்.

அவருக்கு பிறந்த 20 வயது மகளான ஜனட் என்பவரை நிகழ்ச்சி ஒன்றில் பார்த்த பிரயன் அவருடன் நட்பாகியுள்ளார்.

ஜனட் தனது அண்ணன் மகள் என்பதை தெரிந்து கொள்ளாமலேயே அவரை பிரயன் காதலிக்க தொடங்கினாள்.

அதே போல பிரயன் தனது சொந்த சித்தப்பா என்பதை அறியாமல் அவர் மீது காதல் வயப்பட்டார் ஜனட்.

இந்நிலையில் இருவரும் வீட்டுக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் மனைவியை அழைத்து கொண்டு பிரயன் தனது வீட்டுக்கு வந்தார்.

அப்போது வீட்டில் இருந்த பிரயனின் தாய், நீ திருமணம் செய்து அழைத்து வந்திருக்கும் ஜனட் உன்னுடையை அண்ணன் மகள் என கூறினார்.

இதை கேட்டு புதுமண தம்பதிகள் அதிர்ந்து போனார்கள்.

அவர்கள் ஊர் வழக்கப்படி இது போன்ற திருமணம் மிகபெரிய தவறு என்பதால் புதுப்பெண் ஜனட் கணவரிடம் இருந்து பிரிக்கப்பட்டு அவரது பிறந்தவீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers