மகளை அந்த வார்த்தை கூறி அழைத்த தந்தை: ஆத்திரத்தில் செய்த அதிர்ச்சி காரியம்

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

ரஷ்யாவில் மகளை விபச்சாரி என அழைத்த தந்தையை, சகோதரன் கண்முன்னே சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்துள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

ரஷ்யாவை சேர்ந்த ஸ்வெட்லானா மார்டினோவா என்கிற 18 வயது இளம்பெண், தன்னுடைய மாற்றான் தந்தையான டிமூர் மாகோமடோவ் (31) என்பவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

மார்டினோவா தன்னை சரியாக மதிப்பதில்லை எனவும், வசதியான வாழ்வை கொடுத்தும் அதனை பாராட்ட தவறியதாக பேசி, டிமூர் தாக்க ஆரம்பித்துள்ளார்.

மேலும், மகளை பார்த்து ஒழுங்கற்ற முறையில் பணம் சம்பாதிக்கும் விபச்சாரி எனக்கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மார்டினோவா, ஒரு பாட்டிலை எடுத்து டிமூர் தலையில் ஓங்கி அடித்துள்ளார்.

பின்னர் சமையல் கத்தியை கொண்டு சரமாரியாக, டிமூரின் கழுத்து மற்றும் நெஞ்சுப்பகுதியில் குத்தியுள்ளார்.

இதில் சம்பவ இடத்திலேயே டிமூர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அனைத்துமே டிமுரின் 4 வயது மகனின் கண்முன்னரே நடந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக மார்டினோவை கைது செய்த பொலிஸார் அவரிடம் விசாரணை மேற்கொண்ட போது, தற்காப்புக்காக தான் அவரை கொலை செய்தேன் என கூறியுள்ளார்.

ஆனால் அவருடைய கூற்றை ஏற்க மறுத்த பொலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் 6 முதல் 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers