நீச்சல் உடையில் அழகான படம்: செல்பி மோகத்தால் நடந்த விபரீதம்

Report Print Kavitha in ஏனைய நாடுகள்

மலை சிகரங்களில் நீச்சல் உடையில் ஏறி அதை செல்பி எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு பிரபலமடைந்து வந்த தைவானை சேர்ந்த மலையேறும் வீராங்கனை பரிதாபமாக இறந்துள்ளார்.

தைவானை சேர்ந்த மலையேறும் வீராங்கனையான ஜிஜிவூ (36) மலையுச்சிக்கு சென்று செல்பி எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுவதன் மூலமாக பிரபலமாக திகழ்ந்தார்.

இந்நிலையில் இவர் தைவானில் உள்ள யுஷான் தேசிய பூங்கா பகுதியில் உள்ள மலை சிகரத்தில் ஏறி பிகினி நீச்சல் உடையில் எடுத்த செல்பியை வெளியிட்டார்.

இதன்போது எதிர்பார்க்காத நேரத்தில் ஜிஜிவூ கால் தவறி மலையில் இருந்து பள்ளத்தாக்கில் விழுந்து விட்டார்.

இதில் பலத்த காயம் அடைந்த அவர் அதை சேட்லைட் போன் மூலம் தனது ஆதரவாளர்களுக்கு தெரிவித்துள்ளார்.

அவரை மீட்க ஹெலிகாப்டர்கள் விரைந்து சென்ற வேளையில் அவரை காப்பாற்ற முடியவில்லை. அதற்குள் அவர் பரிதாபமாக இறந்துவிட்டார்.

மேலும் இவர் 30 அடி ஆழத்தில் (100 அடி) ஒரு பள்ளத்தாக்கில் வீழ்ந்து இறந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...