பாலியல் தொழிலுக்கு விற்கப்பட்ட 13 முதல் 24 வயது பெண்கள்! அதிர்ச்சியை ஏற்படுத்திய பின்னணி தகவல்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

ஆப்பிரிக்கா கண்டத்தில் பணத்திற்காக பெண்களை கடத்தி விற்கும் தொழில் பெருமளவு அதிகரித்துள்ளதாக கூறப்பட்ட நிலையில், தற்போது அதை நிரூபிக்கும் வகையில் சில பெண்கள் பொலிசார் மேற்கொண்ட அதிரடி சோதனையில் மீட்கப்பட்டுள்ளனர்.

நைஜீரியாவில் நிலவும் கடுமையான வறட்சி காரணமாக அங்கிருக்கும் மக்கள் பிழைப்புத் தேடி வெளிநாடுகளுக்கு செல்கின்றனர். அப்படி செல்லும் பெண்கள் பாலியல் தொழிலில் தள்ளப்படுவதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் அது உண்மை என்று நிரூபிக்கும் வகையில், நைஜீரியாவைச் சேர்ந்த சுமார்20,000 இளம்பெண்கள் கடத்தப்பட்டு வெளிநாடுகளில் விற்கப்பட்டு பாலியல் தொழில்களில் தள்ளப்பட்டுள்ளனர்.

அதாவது அங்கிருக்கும் வறுமையை பயன்படுத்தி, சிலர் அந்நாட்டில் இருக்கும் பெண்களிடம் மலேசியாவில் ஐந்து நட்சத்திர விடுதியில் வேலை, மாதம் 7,000 ரூபாய் சம்பளம், தங்குமிடம் கொடுக்கப்படும் என்று ஆசை வார்த்தை கூறி அழைத்து வந்து, அவர்களை மாலி, தாய்லாந்து போன்ற நாடுகளுக்கு பாலியல் தொழிலாளிகளாக விற்று வந்துள்ளனர்.

தற்போது இது கண்டுபிடிக்கப்பட்டதால், மூன்று விடுதிகளில் மட்டும் 104 பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

அதில் பெரும்பாலான பெண்களின் வயது 13 முதல் 24 வயதே இருந்துள்ளது. இது குறித்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், கடத்தப்படும் பெண்களில் 77 சதவீத பெண்கள் கடத்தப்பட்டவர்களால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

மேலும் இது குறித்த விசாரணையை தீவிரப்படுத்த தனி விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...