25 அறுவைசிகிச்சைகள்... தொடர்ந்து மரமாக உருமாறும் இளைஞர்: நெஞ்சைப் பிசையும் சம்பவம்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

வங்காள தேசத்தில் தொடர்ந்து 25 அறுவைசிகிச்சைகள் மேற்கொண்டும் உடல் முழுவதும் மரமாக மாறிவரும் இளைஞரை முழுமையாக காப்பாற்ற முடியவில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

வங்காள தேச நாட்டவரான 28 வயது அபுல் பாந்தர் என்ற இளைஞரின் கை கால்கள் தற்போதும் மரமாகவே உருமாறி வருகிறது.

கடந்த மே மாதம் முதல் மீண்டும் தமது உடலில் மரம் போன்று உருமாற்றம் நிகழ்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

tree man syndrome என அறியப்படும் ஒருவகை அபூர்வ நோயால் பாதிக்கப்பட்டுள்ள அபுல் பஜந்தரின் வாழ்க்கை நெஞ்சை உலுக்கும் வகையில் அமைந்துள்ளது.

இவரது கை கால்களில் இருந்து வளர்ந்து வரும் மரம் போன்ற பொருளை நீக்கம் செய்ய கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் இதுவரை 25 அறுவைசிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ரிக்‌ஷா ஓட்டுனரான பஜந்தருக்கு இந்த நோய் காரணமாக தொழில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மட்டுமின்றி சுற்றுவட்டார மக்கள் இவரை tree man எனவும் அழைத்து வருகின்றனர்.

பஜந்தருக்கு ஏற்பட்டுள்ள இந்த அபூர்வ நோய் மருத்துவர்களால் குணப்படுத்த முடியும் என்றால் அது மருத்துவத்துறையின் சாதனை என்றே மருத்துவர்களால் குறிப்பிடப்படுகிறது.

ஆனால் மே மாதத்தில் மீண்டும் நோயின் தாக்கம் அதிகரித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த பஜந்தர் யாருக்கும் தெரிவிக்காமல் மருத்துவமனையில் இருந்து வெளியேறியுள்ளார்.

கை, கால்களில் இருந்து மீண்டும் மரம் போன்று வளர்ந்து வருகிறது. மருத்துவமனையில் இருந்து வெளியேறியது தமது தவறு என குறிப்பிடும் பஜந்தர், இந்த முறையேனும் தம்மை முழுமையாக குணப்படுத்த மருத்துவர்களால் சாத்தியப்படும் எனவும் பஜந்தர் தெரிவித்துள்ளார்.

ஆனால் தற்போதைய பஜந்தரின் நிலை மிகவும் கவலையளிக்கும் வகையில் உள்ளது எனவும், இன்னும் சில அறுவைசிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

பஜந்தருக்கு மனைவியும் ஒரு மகளும் உள்ளனர். இவரது அபூர்வ நோய் தொடர்பில் தெரியவந்த தாக்கா மருத்துவமனை இலவசமாக அறுவைசிகிச்சைகள் மேற்கொண்டு வருகிறது.

மட்டுமின்றி அரசின் முழு ஆதரவும் இவருக்கு இருப்பதால் அறுவைசிகிச்சைக்கான அனைத்து செலவுகளையும் அரசே ஏற்றுக்கொண்டுள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு இளம் பெண் ஒருவருக்கும் வங்காள தேசத்தில் tree man syndrome நோய் தாக்கியிருப்பதாக ஆய்வுகள் உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers