பயணிகள் விமானத்தை பயங்கர ஆயுதங்களுடன் கடத்த முயன்ற நபர்! வெளியான அதிர்ச்சி வீடியோவின் பின்னணி

Report Print Santhan in ஏனைய நாடுகள்

ரஷ்யாவில் பயணிகள் விமானத்தை நபர் ஒருவர் கடத்த முயற்சிப்பதாக ஒரு அதிர்ச்சி செய்தி வந்த நிலையில், அதைப் பற்றிய முழு விபரம் தற்போது வெளியாகியுள்ளது.

ரஷ்யாவின் Aeroflot என்ற பயணிகள் விமானம் நேற்று Siberia-விலிருந்து மாஸ்கோவிற்கு சுமார் 76 பேருடன் விமான பயணிகளையும் சேர்த்து சென்றுள்ளது.

அப்போது விமானத்தில் பயணியாக இருந்த பயணி ஒருவர் திடீரென்று பயங்கர ஆயுதம் வைத்திருக்கிறேன், எனறு விமானத்தில் பயணிகளை மிரட்டியுள்ளான்.

அதன் பின் திடீரென்று விமானத்தை இயக்கும் விமானிகள் இருக்கும் பகுதிக்கு செல்ல முயன்றுள்ளான், அதற்காக இடையில் இருந்த கண்ணாடி தடுப்பை உடைக்க முயற்சித்துள்ளான். அதுமட்டுமின்றி விமானத்தை ஆப்கானிஸ்தானிற்கு திருப்பும் படி மிரட்டியுள்ளான்.

கையில் ஆயுதம் வைத்திருப்பதாக கூறியதால், பயணிகள் அருகே செல்ல பயந்துள்ளான். இதனால் விமான உடனடியாக அருகில் இருக்கும் Khanty-Mansiysk விமானநிலையத்தில் பத்திரமாக இறக்கப்பட்டது.

இந்த தகவல் பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், விரைந்து வந்த அதிகாரிகள், முக மூடி அணிந்து கொண்டு வந்து அந்த நபரை கைது செய்தனர் அதன் பின் அந்த நபர் அளவிற்கு மீறி மது அருந்தியுள்ளான் என்பது தெரியவந்துள்ளது.

இதையடுத்து அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், குறைந்த பட்சம் 12 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பிருக்கலாம் என்று உள்ளூர் ஊடகம் தெரிவித்துள்ளது.

அதிகாரிகள் அந்த நபரை கைது செய்து அழைத்துச் சென்ற போது விமானத்தில் இருந்த பயணிகள், அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கை தட்டி தங்கள் நன்றியை தெரிவித்தனர். அதுமட்டுமின்றி அந்த நபரை அதிகாரிகள் கைது செய்யும் வீடியோவும் வெளியாகியுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers