வெளிநாடு ஒன்றில் நெருப்பு கோளமான பேருந்து: 27 பேர் உடல் கருகி பலி

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

பலூசிஸ்தான் நாட்டில் லொறியுடன் பேருந்து மோதிய கோர விபத்தில் 27 பேர் உடல் கருகி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பலூசிஸ்தான் நாட்டின் லாஸ்பேலா மாவட்டத்தில் இந்த கோர விபத்து அரங்கேறியுள்ளது.

குறித்த பேருந்தானது பாகிஸ்தான் நாட்டின் கராச்சியில் இருந்து ஏராளமான பயணிகளுடன் Panjgur மாவட்டத்திற்கு சென்றுள்ளது.

அப்போது லாஸ்பேலா மாவட்டத்தில் வைத்து குறித்த பேருந்தானது லொறியுடன் பலமாக மோதியுள்ளது.

காணொளியை காண

இதில் நெருப்பு கோளமான பேருந்தில் இருந்து இதுவரை 24 சடலங்களை மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட அனைத்து சடலங்களும் கருகிய நிலையிலேயே உள்ளன.

6 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். பலுசிஸ்தானை பொறுத்தமட்டில் இரவு பயணமானது மிகவும் ஆபத்தானது எனவும் ஆண்டு தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் சாலை விபத்தில் கொல்லப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers