நின்றிருந்த கார் மனிதனாக எழுந்து நின்ற அதிசயம்! வியப்படைந்த மக்கள்

Report Print Kabilan in ஏனைய நாடுகள்

கொலம்பியாவில் தெரு கலைஞர் ஒருவர் வருமானம் ஈட்டுவதற்காக ட்ரான்ஸ்பார்மர் படத்தை போல உருமாறி, சாலைகளில் நடமாடி மக்களிடையே வரவேற்பை பெற்று வருகிறார்.

கொலம்பியா நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் நீடிக்கிறது. இதனால் பலரும் தங்களது வாழ்க்கையை கடத்த சிரமப்பட்டு வருகிறார்கள்.

Luise Rene Cruz என்ற தெரு கலைஞரும் வேலையில்லா திண்டாட்டம் காரணமாக குடும்பத்தை நடத்த கஷ்டப்பட்டு வருகிறார்.

இந்நிலையில், ஹாலிவுட்டில் வெளியான ட்ரான்ஸ்பார்மர் திரைப்படத்தில் வருவது போல் மனிதனைப் போல் மாறும் சிறிய ரக காரை தனது சைக்கிளைக் கொண்டு வடிவமைத்தார்.

அதன் பின்னர் சாலைகளில் பயணித்து ரோபோவைப் போல் உருமாறி நடமாடினார். இதனை நேரில் பார்த்த மக்கள் வியப்படைந்தனர். பின்னர் Luis-யின் வித்தியாசமான அணுகுமுறையை கண்டு சொற்ப பணத்தையும், வெகுமதியாக அளித்து செல்கின்றனர்.

இதுகுறித்து Luise கூறுகையில், ‘இதன்மூலம் நாளொன்றுக்கு 13 டொலர் வருவாய் கிடைக்கிறது. வார இறுதியில் இரட்டிப்பு வருமானம் கிடைக்கிறது’ என தெரிவித்துள்ளார்.

இவ்வாறு மாதத்திற்கு 1200 இடங்களுக்கு சென்று வருவாய் ஈட்டி, தனது குடும்பத்தினருடன் நிம்மதியாக வாழ வேண்டும் என்பதே Luis-யின் கனவாக உள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers