பறக்கும் விமானத்தில் நடந்த அசம்பாவிதம்... அலறிய பயணிகள்: அவசரமாக தரையிறக்கப்பட்டதால் பரபரப்பு

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் இருந்து ஐக்கிய அமீரகம் செல்லும் விமானத்தில் திட்டிரென்று பயணிகள் மூச்சுத்திணறலால் அவதிப்பட்டதால் குறித்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

மாஸ்கோவில் இருந்து துபாய் செல்லும் Ural விமான சேவை நிறுவனத்தின் விமானம் ஒன்றே பயணிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் தரையிறக்கப்பட்டது.

விமானத்தினுள் விஷ வாயு பரவியதாகவும், அதனாலையே பயணிகள் பலருக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது என சில தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்தே அவசரமாக விமாத்தை திருப்பி விட்டுள்ளார் விமானி. தொடர்ந்து தரையிறக்கப்பட்ட விமானத்தில் 5 ஆம்புலன்ஸ்களில் மருத்துவ உதவிக்குழுக்கள் விரைந்து சென்று பயணிகளுக்கு முதலுதவி அளித்துள்ளனர்.

விமானம் புறப்பட்ட 40 நிமிடங்களில் இச்சம்பவம் நடந்துள்ளதாகவும், திடீரென்று பெண் பயணி ஒருவர் மருத்து உதவி கேட்டு அலறியதாகவும்,

அவரது கணவர் மூச்சுத்திணறலால் அவதிக்குள்ளாகி இருப்பதும் தெரியவந்தது. ஆனால் அவர் மட்டுமின்றி, மேலும் பல பயணிகள் இதேப்போன்று மருத்துவ உதவி கேட்டு குரல் எழுப்பியுள்ளனர்.

சிலரது முகம் பச்சை வண்ணத்துக்கு மாறியதாகவும், சிலர் கடுமையாக மூச்சுவிட முடியாமல் அவஸ்தைக்கு உள்ளானதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் இது விமானத்தில் வழங்கப்பட்ட உணவுகளால் அல்ல எனவும், பாதிக்கப்பட்ட ஐவருக்கும் விமான நிலைய மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும்,

இதில் மூவர் தொடர்ந்து பயணிக்க ஒப்புக்கொண்டதாகவும், இருவர் அச்சம் காரணம் அதே விமானத்தில் பயணப்பட மறுப்பு தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே தொடர்புடைய விமானத்தை சிறப்பு அதிகாரிகள் குழு முழுமையாக சோதனையிட்டதாகவும், 2 மணி நேரத்திற்கு பின்னர் துபாய் நோக்கி புறப்பட்டு சென்றதாகவும் விமான நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers