காது கேளாத தாய்- தந்தைக்காக ஒன்றரை வயது குழந்தை செய்த காரியம்: கண் கலங்க வைக்கும் வீடியோ

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

மெக்சிகோ நாட்டில் தாய்- தந்தை இருவரும் காது கேளாத குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருப்பதால், அவர்களிடம் பேச குழந்தை சிரமப்படும் வீடியோ காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது.

மெக்சிகோ நாட்டின் சோனோரா பகுதியை சேர்ந்தவர்கள் கிறிஸ்டினா - ஜோனாதன் தம்பதியினர். இருவரும் காது மற்றும் வாய் பேச முடியாத குறைபாட்டினால் பாதிக்கப்பட்டவர்கள்.

இந்த தம்பதியினருக்கு ஒன்றரை வயதில், மரியா சோபியா என்கிற பெண் குழந்தை உள்ளது.


தாய்- தந்தை இருவருக்கும் குறைபாடு இருப்பதால், சோபியா மிகவும் இளம்வயதில் சைகைமொழியை கற்றுக்கொண்டு வருகிறார்.

அந்த வகையில், தன்னுடைய தந்தையுடன் சோபியா பேசும் வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

அந்த வீடியோவில், பிரெட் வேண்டும் என கேட்பதற்காக அந்த குழந்தை விரலை தன்னுடைய வாயில் வைக்கிறது. அதனை பார்த்து பூரித்து போன தந்தை, நீ சைகை மொழி பயன்படுத்த விரும்புகிறாயா? என கேட்டுக்கொண்டே ஆசையாக கலங்கிய கண்ணுடன் கட்டியணைக்கிறார்.

இதுகுறித்து சோபியாவின் பாட்டி லூப்பி பாடிலா கூறுகையில், அவளுக்கு சைகை மொழியில் ஒரு சில வார்த்தைகள் மட்டுமே தெரியும். அதனால் அவள் அதிகம் எதுவும் பேச மாட்டாள். மற்ற குழந்தைகளை போலவே அவளும், தந்தையிடம் பேச விரும்புகிறாள்.

எப்படி பேச வேண்டும் என்பது தெரியாமலே அவள் பேசுவாள் என தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த வீடியோ காட்சியை பார்க்கும்போது தனக்கு கண்ணீர் வந்துவிட்டதாகவும், இனிமேல் அப்பகுதியில் உள்ள காது கேளாதவர்களுக்கு சைகைமொழி பாடம் கற்றுக்கொடுக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers