பயணிகள் விமானத்தில் பல முன்னிலையில் சக பயணி செய்த செயல்! முகம் சுழிக்க வைக்கும் வீடியோ

Report Print Santhan in ஏனைய நாடுகள்

ரஷ்யா ஊடகம் ஒன்று பறக்கும் விமானத்தில் குடி போதையில் இருக்கும் நபர் ஒருவர் பயணிகள் பலர் முன்னிலையில் சிறுநீர் கழிக்கும் வீடியோ ஒன்றை செய்தியாக வெளியிட்டுள்ளது.

விமானத்தில் பயணிக்கும் பயணிகளின் சேட்டை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. விமானத்தில் பயணிகள் நடந்து கொள்ளும் மோசமான சம்பவங்களை அது தொடர்பான விமான நிறுவனங்கள் தங்களுடைய டுவிட்டர் அல்லது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடும்.

இனிமேல் இது போன்று செய்யாதீர்கள் என்று விமானநிறுவனங்களும் ஒவ்வொரு முறையும் கேட்டு கொள்ளும்.

ஆனால் அதை பயணிகள் கேட்பது போல் இல்லை, அதை தற்போது நிரூபிக்கும் பயணிகள் விமானம் ஒன்றில் பயணித்த நபர் அளவிக்கு மீறிய குடி போதையில் விமானத்தில் தான் இருக்கும் இடத்திலே சிறுநீர் கழிக்கிறார்.

இதைக் கண்ட அங்கிருந்தவர்களில் ஒரு பயணி வீடியோவாக எடுத்து சமூகவலைதள பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

இது சரியாக எங்கு நடந்தது என்பது தெரியவில்லை, ஆனால் மற்றொரு ஆங்கில ஊடகம் ஒன்று Bangkok --லிருந்து Novosibirsk செல்லும் போது தான் இது நடந்தது என்று குறிப்பிட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers