கடற்கரையில் ஹாயாக நடந்து வந்த முதலை, அலறியடித்து ஓடிய மக்கள்: சுவாரஸ்ய வீடியோ

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

கடற்கரையில் ஜாலியாக பொழுதைப் போக்க வந்த மக்கள், முதலை ஒன்று ஹாயாக நடந்து வருவதைக் கண்டு அதிர்ச்சியுற்றனர்.

அவர்கள் வன விலங்குகள் நல அலுலர்களிடம் தெரிவிக்க, உடனடியாக மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.

இதில் வேடிக்கை என்னவென்றால், மக்களை வெளியேற்றியது மக்களின் பாதுகாப்புக்காக மட்டும் அல்ல, முதலையின் பாதுகாப்புக்காகவும்தான் என்று அதிகாரிகள் கூறியுள்ளதுதான்.

பதிவு செய்யப்பட்டுள்ள வீடியோ ஒன்றில், மக்கள் முதலை வருவதை அறிந்து கொண்டு அலறியடித்து ஓட்டம் பிடிக்க, சிலர் எங்கிருந்து முதலை வருகிறது என்றே தெரியாமல் முதலையின் அருகிலேயே ஓடி வருவது தெரிகிறது.

ஒருவேளை அவர்கள் முதலை மீது தவறி விழுந்திருந்தால், முதலையால் தாக்கப்பட்டிருக்கலாம்.

பின்னர் வன விலங்குகள் நல அதிகாரிகள், மக்களிடம், அந்த கடற்கரை அமைந்துள்ள இடம் மக்களுக்காக மட்டுமின்றி வன விலங்குகளைக் காப்பதற்காகவும்தான் என்றும், எனவே முதலை ஒன்றை அங்கு காண்பது உண்மையில் நல்ல விடயம்தான் என்றும் கூறினர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers