அந்த 3 நாட்களில் குழந்தைகளோடு தனிமையில் தங்கவைக்கப்பட்ட பெண்: நடந்த விபரீத சம்பவம்

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்

நேபாள் நாட்டில் மாதவிடாய் காலத்தில் பெண்கள் வீட்டுக்குள் தங்குவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை.

இதற்காக தனியாக ஒரு குடிசை ஒன்று அமைக்கப்பட்டு அதில் தான் தங்கவைக்கப்படுகின்றனர்.

அதாவது, இந்துக்களின் முறைப்படி தூய்மைக்காகவும், கெட்ட சக்தி என கருதப்பட்டு இது பின்பற்றப்படுகிறது, இந்த முறை 2005 ஆம் ஆண்டு நேபாள் நாட்டில் தடைசெய்யப்பட்டாலும், இன்று வரை ஒருசிலர் அதனை பின்பற்றி வருகின்றனர்.

Budhinanda என்ற பகுதியில் Amba Bohara என்ற 35 வயது பெண்மணி தனது மாதவிடாய் காலத்தில் தனியாக தங்கவைக்கப்பட்டதில் குடிசைக்குள் தீவிபத்து ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

இவருடன் தங்கியிருந்த இவரது இரண்டு குழந்தைகளும் உயிரிழந்துள்ளனர். குடிசைக்குள் தீப்பிடித்து புகை அதிகமாக ஏற்பட்டதால், மூச்சுவிட சிரமப்பட்டு தூக்கத்திலேயே மூன்று பேரும் உயிரிழந்துள்ளனர்.

ஒரு குடும்பத்தையே இழந்துவிட்டேன், இதனால் எனது இதயம் நொறுங்கிவிட்டது எனது கணவர் கூறியுள்ளார். தற்போது இந்த சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers