மூன்று மாதங்களில் 1.47 மில்லியன் மக்கள் படுகொலை: வெளியான பகீர் தகவல்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

இரண்டாம் உலகப்போரின்போது ஹிட்லரின் நாஜிக்களால் 6 மில்லியன் யூதர்கள் கொல்லப்பட்ட நிலையில் 100 நாட்களில் மட்டும் அதில் நான்கில் ஒரு பகுதி மக்கள் கொல்லப்பட்டதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

இதில் பெரும்பகுதி மக்கள் Belzec, Sobibor மற்றும் Treblinka பகுதிகளில் உள்ள முகாம்களில் அடைக்கப்பட்டவர்கள்.

நாஜிக்களால் ஆபரேஷன் ரெய்ன்ஹார்ட் என பெயரிடப்பட்டு நடத்தப்பட்ட இந்தப் படுகொலையில் எவரும் தப்பியதாகவோ, அல்லது எப்போது இதனை முடிவுக்கு கொண்டுவந்தனர் என்றோ போதிய ஆதாரங்கள் இல்லை என கூறும் ஆய்வாளர்கள்,

ஆனால் சுமார் 100 நாட்கள் நடத்தப்பட்ட இந்த ஆபரேஷன் ரெய்ன்ஹார்ட் ஒட்டுமொத்தமாக 1.47 மில்லியன் மக்களின் உயிரை பறித்திருக்கும் என தெரிவித்துள்ளனர்.

குறிப்பிட்ட ரயில் ஒன்றி ஏற்றிச் செல்லப்பட்ட மக்களே பெரும்பாலும் ஆபரேஷன் ரெய்ன்ஹார்ட்-ல் கொல்லப்பட்டது என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

ஆபரேஷன் ரெய்ன்ஹார்ட் தொடர்பில் போதிய ஆவணங்கள் ஏதும் இல்லை என்றாலும், சுமார் 21 மாதங்கள் செயற்பாட்டில் இருந்திருக்கலாம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

1942 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் அக்டோபர் மாதம் வரையான காலகட்டத்தில் குறிப்பிட்ட மூன்று முகாம்களில் மட்டும் சுமார் 1.1 மில்லியன் மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் சுமார் 302,000 மக்கள் உக்ரைன் மற்றும் தெற்கு ரஷ்யாவில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். ஆஸ்விட்ச் முகாமில் மட்டும் 91,400 யூதர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

ஆய்வுகளின் அடிப்படையில் இந்த 3 மாதங்களில் மட்டும் சுமார் 445,700 பேர் ஒவ்வொரு மாதமும் கொல்லப்பட்டுள்ளனர்.

அதாவது நாள் ஒன்றிற்கு சுமார் 13,500 பேர் நாஜிக்களால் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

டிசம்பர் மாதத்திற்கு பின்னர் இந்த எண்ணிக்கையானது கடுமையாக சரிந்துள்ளது. காரணம் அப்போது நாஜிக்களின் பார்வையில் இருந்து தப்பி உயிருடன் எவரும் இல்லை என்பதே என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers