ஆயிரம் மைல்கள் கடந்து சென்று மாணவியின் கழுத்தறுத்த இளைஞர்: வெளியான பகீர் தகவல்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

தம்மை மறுபடியும் ஏற்றுக்கொள்ள மறுப்பு தெரிவித்த மாணவியை பழி வாங்க இளைஞர் ஒருவர் 1,000 மைல்கள் கடந்து சென்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

துருக்கி நாட்டை சேர்ந்தவர் 20 வயதான Tsokmez Gusnu Tsan. இவரே தமது காதலி மற்றும் அவரது தோழி ஆகிய இருவரையும் கொல்ல உக்ரைன் நாட்டுக்கு சென்றவர்.

துருக்கு நாட்டவர்களான Buket Yildyz(22) மற்றும் அவரது தோழி Zeynep Khusyunbey(20) ஆகிய இருவரும் உக்ரைன் நாட்டில் உள்ள Karazin Kharkiv தேசிய பல்கலைக்கழகத்தில் பயின்று வருகின்றனர்.

துருக்கியில் வசித்து வந்தபோது இருவரும் Tsokmez Gusnu Tsan என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் சமீபத்தில் இஸ்தான்புல் நகரத்தில் இருந்து 713 மைல்கள் பறந்து சென்று Kharkiv சென்ற Tsan மாணவி Buket-இடம் தமது காதலை தெரிவித்துள்ளார்.

ஆனால் Buket அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளதுடன், தாம் நண்பர்களாக இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

இதில் ஆத்திரம் அடைந்த Tsan அந்த மாணவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனிடையே பொதுமக்கள் கூடியதால் அங்கிருந்து மாயமாகியுள்ளார் Tsan.

ஆனால் அடுத்த நாள் அந்த மாணவிகள் இருவரும் தங்கியிருந்த குடியிருப்புக்கு சென்ற Tsan, அவர்கள் இருவரையும் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.

பின்னர், சமையலறையில் இருந்த எரிவாயு சிலிண்டர்களையும் திறந்து விட்டு அங்கிருந்து மாயமாகியுள்ளார்.

இந்த நிலையில் மாணவிகளை மொபைலில் தொடர்பு கொள்ள முடியாத உறவினர்கள் பொலிசாரின் உதவியை நாடிய நிலையிலேயே அவர்கள் கொல்லப்பட்ட விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இதனிடையே உக்ரைனில் இருந்து துருக்கி நாட்டுக்கு தலைமறைவான இளைஞர் Tsan-ஐ சர்வதேச பொலிசாரின் உதவியுடன் கைது செய்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...