3 மணிநேரமாக வீட்டின் டோர் பெல்லை நக்கிகொண்டு இளைஞர் அடித்த கூத்து: சிசிடிவில் சிக்கிய காட்சி

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்

அமெரிக்காவில் இளைஞர் ஒருவர் சுமார் 3 மணிநேரமாக டோர் பெல்லை நக்கிகொண்டிருந்த விநோத சம்பவம் நடந்துள்ளது.

கலிபோர்னியா மகாணத்தைச் சேர்ந்த சாலினாஸ் பகுதியைச் சேர்ந்தவர் சில்வியா டங்கன் என்ற பெண்மணியின் வீட்டின் டோர் பெல்லை இளைஞர் நக்கிகொண்டிருந்துள்ள சமிக்ஞை, சில்வியாக்கு சென்றுள்ளது.

கமெராவை சோதித்து பார்த்த போது சில்வியா அதிர்ச்சியடைந்தார். அதில் வீட்டின் முன்பு உள்ள டோர் பெல்லை 3 மணி நேரத்திற்கும் மேலாக இளைஞர் ஒருவர் நக்கிக் கொண்டிருந்த வினோத காட்சி பதிவாகியிருந்தது.

இதுகுறித்து சில்வியா, பொலிசில் புகார் அளித்திருந்த நிலையில், குறித்த இளைஞர் யார் என்பது குறித்து பொலிசார் தேடி வந்த நிலையில், அவர் 33 வயதான ராபர்டோ டேனியல் ஆரோயோ என்பது தெரியவந்ததையடுத்து அவரை கைது செய்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers