என்னை அழைத்துப்போக தந்தை வந்திருக்கிறார்: உலக நாடுகளிடம் அகதி உரிமை கோரிய சவுதி பெண்

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்

சவுதி அரேபியாவிலிருந்து பயணம் செய்துவந்த போது தனது பெற்றோரிடம் இருந்து தப்பித்து தாய்லாந்து சென்றுள்ள 18 வயது பெண் ரஹாஃப் ஐ.நா. அகதிகள் முகமையின் பாதுகாப்பில் இருப்பதாக குடியேற்றதுறை அதிகாரிகள தெரிவித்துள்ளனர்.

சட்டத்தை மீறியதற்காக இந்த இளம் பெண்ணை தாய்லாந்து அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.

தாம் இஸ்லாம் மதத்தைத் துறந்துவிட்டதாகவும், சவுதி அரேபியாவுக்கு வலுக்கட்டாயமாக அனுப்பப்பட்டால் எனது குடும்பத்தால் கொல்லப்படுவேன் என்றும் இதனால் அவுஸ்திரேலியாவில் அகதி உரிமை கோரப்போவதாக தாய்லாந்து அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தாய்லாந்தில் உள்ள இப்பெண் வெளியிட்ட ஒரு டுவிட்டர் பதிவில், 'என்னை அழைத்து போக என் தந்தை வந்திருக்கிறார். இது எனக்கு கவலை அளிக்கிறது.

ஆனால் ஐ.நா. முகமையின் பாதுகாப்பில் நான் பாதுகாப்பாக உணர்கிறேன். மேலும் எனது பாஸ்போர்ட்டை திரும்பப் பெற்றுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

இதன்பிறகு 'இனி இழப்பதற்கு எதுவும் இல்லை' என்று கூறிய அவர் தனது பெயர் மற்றும் அடிப்படை தகவல்களை ட்விட்டரில் பகிர்ந்தார்.

மேலும் புகலிடம் கோரி உலகெங்கிலும் உள்ள நாடுகளுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers