பிடிபட்டால் தண்டனை என்று தெரிந்தும் தெருவில் ஈரானிய பெண்கள் செய்த செயல்: வெளியான வீடியோ

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

கலை, இசை என அனைத்து கலாச்சார வெளிப்பாடுகளையும் சென்சார் செய்யும் நாடான ஈரானில், தண்டிக்கப்படலாம் என்பது தெரிந்தும் நான்கு பெண்கள் தெருவில் நடனமாடி அதை சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளனர்.

ட்விட்டரில் வெளியிடப்பட்டுள்ள அந்த வீடியோவில், நான்கு பெண்கள் Tehranஇல் நடனம் ஆடுவது பதிவாகியுள்ளது.

ஈரான் பெண்களுக்கு பல விடயங்களில் பாலின ரீதியாக சமத்துவம் கொடுக்கப்படுவதில்லை.

இதை எதிர்த்து பொது இடங்களில் தங்கள் உரிமையை நிரூபிக்க பல முயற்சிகள் பெண்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு கட்டமாகவே தலையில் ஹிஜாப் அணிந்த இந்த நான்கு பெண்களும் தெருவில் நடனம் ஆடும் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு ஈரான் பெண்கள் நடனமாடுவது இது முதல் முறையல்ல, ஏற்கனவே 2018ஆம் ஆண்டு Maedeh Hojabri (18) என்ற பெண் நடனம் ஆடும் வீடியோவை அப்லோட் செய்ததற்காக கைது செய்யப்பட்டதை எதிர்த்து ஏராளமான பெண்கள் தாங்கள் நடனம் ஆடும் வீடியோக்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டனர்.

ஆனால் அவர்களில் பலர் பின்னர் கைது செய்யப்பட்டதோடு, அவர்கள் மன்னிப்புக் கோரும் வீடியோக்கள் ஈரான் அரசு தொலைக்காட்சியில் வெளியிடப்பட்டது. தடைகளை எதிர்த்து மீண்டும் இந்த பெண்கள் நடனம் ஆடும் வீடியோவை வெளியிட்டதற்கு பிரித்தானியா, அமெரிக்கா உட்பட பல நாடுகளிலிருந்தும் ஆதரவு குவிகின்றது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers