சிறுவர்கள் பள்ளியில் புகுந்து மர்ம நபர் கத்திக்குத்து தாக்குதல்: 20 பேர் படுகாயங்களுடன் மீட்பு

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

சீனாவில் சிறுவர் தொடக்க பள்ளியில் மர்ம நபர் நடத்திய கத்திக்குத்து தாக்குதலில் 20 பேர் காயமடைந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் யு செங் மாகாணத்தில் செயல்பட்டு வரும் சிறுவர் தொடக்க பள்ளியில் மர்ம நபர் ஒருவர், கத்திக்குத்து தாக்குதல் நடத்தியுள்ளார்.

விளையாட்டு நேரத்தில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த மாணவர்களின் தலையில், அந்த நபர் சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த உடற்கல்வி ஆசிரியர் தடுத்து நிறுத்தி பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் மர்ம நபரை கைது செய்துள்ளனர். அவர் கத்தியால் தாக்கியதாக நம்பப்படுகிறது. ஆனால் அங்கிருந்து தப்பி ஓட முயற்சித்தபோது கையில் சுத்தியல் வைத்திருந்ததாக நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.

இந்த தாக்குதலில் 20 சிறுவர்கள் காயமடைந்துள்ளதாகவும், அதில் 4 பேரின் நிலை மோசமடைந்திருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் பள்ளி வளாகத்திற்கு முன்பு கூடிய பெற்றோர் சம்பவம் குறித்து கேள்வி எழுப்ப ஆரம்பித்தனர். அதற்கு பதிலளித்துள்ள பள்ளி முதல்வர், தாக்குதலில் ஈடுபட்ட நபர் இதற்கு முன்பாக பள்ளியில் வாயிற்காவராக பணியாற்றியவர் எனவும், அவர் சமீபத்தில் வேலையிலிருந்து நீக்கப்பட்டார் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers