தந்தையை கடித்து சாப்பிட்ட நாய்.... சுயநினைவற்று கிடந்த தாய்: 24 மணிநேரம் திக் காட்சியை படம் பிடித்து பதிவிட்ட 6 வயது சிறுமி

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்

அமெரிக்காவின் Detroit பகுதியில் 6 வயது சிறுமி ஒருவர் 24 மணிநேரமாக தனது பெற்றோருக்கு நடந்த சம்பவத்தை படம் பிடித்து சமூகவலைதளத்தில் பதிவிட்டதையடுத்து தாயின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது.

நடந்த சம்பவம் குறித்து தெரியவருவதாவது, 6 வயது சிறுமி ஒருவர் இறந்துபோன தனது தந்தையின் முகத்தை நாய் கடித்து சாப்பிட்டதையும் தனது தாய் சுயநினைவற்று கிடந்ததையும் படம் எடுத்து சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதனைப்பார்த்த சிறுமியின் தாத்தா பாட்டியினர் மற்றும் உறவினர்கள் உடனடியாக பொலிசார் மற்றும் அவசர உதவிக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

வீட்டிற்கு விரைந்து சென்ற பொலிசார் கதவை உடைத்து வீட்டுக்குள் சென்றுள்ளனர். சுமார் 24 மணிநேரம் சிறுமி தனது பெற்றோருக்கு நேர்ந்த இந்த நிலைமையை பார்த்துக்கொண்டிருந்துள்ளார்.

என்ன செய்வது என்று தெரியாமல் இறுதியில் படம் பிடித்து புகைப்படத்தை பதிவேற்றியுள்ளார். பெற்றோர் இருவரும் அதிகப்படியான போதையை பயன்படுத்தியதால், தந்தை இறந்துபோயுள்ளார்.

தாய் சுயநினைவற்ற நிலைக்கு சென்றுள்ளார், தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தாய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers