துரோகம் செய்த கணவன் மனைவியை நம்ப வைப்பதற்காக செய்த காரியம்: அதிர்ச்சியளிக்கும் புகைப்படம்

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

கடந்த சில நாட்களாகவே மனைவியிடம் மன்னிப்பு கேட்கும் வகையில் ஒரு கணவர், உடலில் பச்சை குத்தியிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

வீடுகளில் கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் நடைபெறுவது சகஜமாக ஒன்று தான். இது ஒரு சில இடங்களில் எல்லை மீறி பெரும் சண்டையாக கூட முடிந்துவிடும். மறு சில நேரங்களில் தவறு செய்தவர் திருந்தும் வகையிலும் முடியும்.

அப்படியே அந்த நபர் திருந்திவிட்டாலும் கூட, அதனை சகத்துணை அவ்வளவு எளிதில் நம்பிவிட மாட்டார்கள்.

அந்த வரிசையில், தான் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்கும் விதமாகவும், மனைவியை நம்ப வைப்பதற்காகவும் ஒரு கணவர் தன்னுடைய உடலில் பச்சை குத்தியுள்ளார்.

இந்த புகைப்படமானது தற்போது இணையம் முழுவதும் வைரலாக பரவி வருகிறது.

அந்த புகைப்படத்தில் அவருடைய முழு விவரங்களையும் வெளியிட்டதோடு, தான் செய்த தவறுகளையும் பட்டியலிட்டுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers