போருக்கு தயாராகுங்கள்: சீன அதிபரின் பேச்சால் உலக நாடுகளிடையே பரபரப்பு

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்

தென்சீனக்கடல் விவகாரத்தில் சீனாவும் அமெரிக்காவும் தொடர்ந்து மோதி வரும் நிலையில் போருக்கு தயாராகுங்கள் என சீன அதிபர் அறிவித்துள்ள உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுதந்திர நாடு என்று பிரகடனப்படுத்திக் கொண்ட தைவானை சீனா தொடர்ந்து சொந்தம் கொண்டாடி வருகிறது. தைவான் சீன ஆளுகைக்கு உள்பட்ட ஒரு பகுதியே என்று சமீபத்தில் அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் பேசியிருந்தார். மேலும், தைவானை மீண்டும் சீனா உடன் இணைக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

ஆனால், சீனாவின் இந்த நடவடிக்கைக்கு ஆரம்பத்தில் இருந்தே அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

தைவானின் பாதுாப்புக்கு ஒத்துழைப்பு தரும் ஒப்பந்தந்தத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சமீபத்தில் கையெழுத்திட்டார்.

இதனால், சீனா - அமெரிக்கா நாடுகளுக்கிடையே பிரச்சனை தொடங்கியுள்ளது. அமெரிக்காவில் இந்த கையெழுத்து சீனாவை கோபப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து ராணுவ கமிஷன் கூட்டத்தில் பேசிய சீன அதிபர் ஜின் பிங், மிக வேகமாக நவீனமாகி வரும் சீன ராணுவம், போருக்கும், எத்தகையதொரு நெருக்கடியையும் எதிர்கொள்ளும் வகையில் தயார் நிலையில் இருக்கவேண்டும். சீன கம்யூனிஸ்ட் இடும் கட்டளைகளை உறுதிபட நிறைவேற்றவேண்டும் என கூறியுள்ளார்.

சீன அதிபரின் இந்த கருத்துக்கள் சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers