உலகின் மிகவும் பாதுகாப்பான விமான சேவை நிறுவனம்: வெளியான பட்டியல்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

கடந்த 2018 ஆம் ஆண்டின் மிகவும் பாதுகாப்பான விமான சேவை நிறுவனங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

சர்வதேச விமான சேவை நிறுவனங்களின் பாதுகாப்பு தரவரிசைப் பட்டியலில் கடந்த 2018 ஆம் ஆண்டு மிகவும் பாதுகாப்பான விமான சேவை நிறுவனமாக Finnair தெரிவாகியுள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு முதலிடத்தை கைப்பற்றிய Emirates விமான சேவை நிறுவனம் தற்போது 4-ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

ஸ்பெயின் நாட்டு விமான சேவை நிறுவனமான Europa 5-வது இடத்தில் உள்ளது. Lufthansa விமான சேவை நிறுவனம் 21-வது இடத்தில் உள்ளது.

குறைந்த கட்டண விமான சேவை நிறுவனமான Eurowings பாதுகாப்பு தரவரிசைப் பட்டியலில் 25-வது இடத்தில் உள்ளது.

2017 ஆம் ஆண்டு 40-வது இடத்தில் இருந்த சுவிஸ் ஏர் விமானம் 2018 ஆம் ஆண்டு 60-வது இடத்திற்கு சரிவை சந்தித்துள்ளது.

ரஷ்யா, எத்தியோப்பியா மற்றும் இந்தோனேசியா நாடுகளின் விமான சேவை நிறுவனங்கள் பாதுகாப்பு தொடர்பான தரவரிசை பட்டியலில் மிகவும் மோசமான பங்களிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers