காட்டிலிருந்து மனிதர்களின் உதவியை நாடி நாட்டுக்குள் வந்த புலி: ஆச்சரிய வீடியோ

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

சைபீரிய புலி வகையைச் சேர்ந்த புலி ஒன்று ரஷ்ய வனப்பகுதியிலிருந்து மனிதர்களின் உதவியை தேடி வந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

புலி ஒன்று ரஷ்ய வனப்பகுதியிலிருந்து சீனாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான எல்லைக்கு வந்ததோடு, அங்கிருந்த இரண்டு காவல் நாய்களையும் கொன்று சாப்பிட்டது.

எல்லை பாதுகாப்பு படையினர் அதை எச்சரிக்கும் வண்ணம் வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டும், அது காட்டுக்குள் ஓடவில்லை.

பொதுவாக இவ்வகை புலிகள் மனிதர்களை கண்டுகொள்வதில்லை. ஆனால் இந்த புலி மட்டும் மனிதர்கள் இருக்கும் இடம் தேடி வந்ததோடு வித்தியாசமாக நடந்து கொள்ளவே, எல்லை பாதுகாப்பு படையினர் வனத்துறை அலுவலர்களை அழைக்க, அவர்கள் வந்து மயக்க மருந்து செலுத்தி புலியைப் பிடித்தனர்.

பின்னர்தான் புலியின் உடலில் காயம் ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. பொதுவாக மனிதர்கள் இருக்கும் இடத்திற்கு வராத அந்த புலி, தனது காயத்திற்கு சிகிச்சை பெறுவதற்காகவே காட்டிலிருந்து நாட்டுக்குள் வந்துள்ளதை அறிந்த வனத்துறை அலுவலர்கள் ஆச்சரியம் அடைந்தனர்.

பின்னர் அந்த புலி, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அந்த புலி சுமார் 15 வயதுடையது புலியின் தற்போதைய நிலைமை தெரியவில்லை.

இரத்தப் பரிசோதனைகளுக்குப் பின்னர்தான் அடுத்து என்ன செய்வது என்பது முடிவு செய்யப்படும் என்றாலும், காட்டுக்குள் அதை விடுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்கிறார் வனத்துறை அலுவலர் ஒருவர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers