தூக்கத்தில் இருந்த இளம் பெண்ணின் உள்ளாடையை தொட்ட ஜனாதிபதி: வலுக்கும் எதிர்ப்பு

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரோட்ரிகோ டியுடெர்ட் தூக்கத்தில் இருந்த இளம் பெண்ணின் உள்ளாடையை தொட்ட விவகாரம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

சர்ச்சைகளுக்கு பெயர்போன பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரோட்ரிகோ டியுடெர்ட் தற்போது மகளிர் அமைப்புகளின் கடும் கோபத்திற்கு உள்ளாகியுள்ளார்.

ரோட்ரிகோ டியுடெர்ட் மன்னிப்பு கேட்பதுடன் பதவி விலக வேண்டும் எனவும் மகளிர் அமைப்புகள் போராட்டத்தில் குதித்துள்ளன.

கடந்த சனிக்கிழமை இரவு நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட ஜனாதிபதி ரோட்ரிகோ டியுடெர்ட், தமது வாழ்க்கையில் நடந்த சம்பவம் ஒன்றை பொதுமக்களிடம் பகிர்ந்துள்ளார்.

அதில், தமது இளமைப்பருவத்தில் தனது குடியிருப்பில் வேலை செய்து வந்த இளம்பெண்ணின் உள்ளாடையை ஆர்வ மிகுதியாக தொட்டதாக தெரிவித்துள்ளார்.

சம்பவத்தின்போது தூக்கத்தில் இருந்த அந்த இளம்பெண்ணின் போர்வையை விலக்கி அவரது உள்ளாடையை தொட்டதாக கூறும் ஜனாதிபதி ரோட்ரிகோ டியுடெர்ட்,

இதை தாம் ஒரு பாதிரியாரிடம் கூறி பாவமன்னிப்பு கோரியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ரோட்ரிகோ டியுடெர்ட் அந்த இளம்பெண்ணின் உள்ளாடையை தொட்டவுடன் குறித்த பெண் தூக்கம் கலைந்து வேறு அறைக்கு சென்றதாகவும், ஆனாலும் தொடர்ந்து இவர் முயற்சி செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், மகளிர் அமைப்புகள் ஜனாதிபதி ரோட்ரிகோ டியுடெர்ட் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும்,

இது பாலியல் பலாத்காரத்திற்கு முயற்சித்ததற்கு ஒப்பான செயல் எனவும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

ஆனால் தற்போதைய காலகட்டத்தில் கிறிஸ்தவ பாதிரியார்கள் எந்த நிலையில் இருக்கிறார்கள் எனவும்,

அவர்கள் மீதான பாலியல் புகார்களின் முகாந்திரம் என்ன என்பது தொடர்பாக ஜனாதிபதி ரோட்ரிகோ டியுடெர்ட் ஒரு துணுக்குக்கதை ஒன்றை மட்டுமே தெரிவித்துள்ளார் எனவும் ஜனாதிபதி அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது.

மட்டுமின்றி இந்த விவகாரத்தை அப்போது பாதிரியாரிடம் கூறியதன் பின்னர் அவரால் பலமுறை பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்