விமானிகளின் கல்வித் தகுதி... அம்பலமான தகவல்கள்: அதிர்ச்சியில் சர்வதேச விமான போக்குவரத்து துறை

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

பாகிஸ்தான் நாட்டின் உத்தியோகபூர்வ விமான சேவை நிறுவன ஊழியர்களின் கல்வித்தகுதி தொடர்பில் வெளியான தகவல்கள் சர்வதேச விமான போக்குவரத்து துறையை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

வெறும் பத்தாம் வகுப்பு கூட வெற்றி பெறாத பலபேர் பாகிஸ்தான் சர்வதேச விமான சேவை நிறுவனத்தில் விமானிகளாக பணியாற்றி வருகின்றனர்.

பாகிஸ்தான் விமான போக்குவரத்து துறையே குறித்த தகவல்களை அங்குள்ள உச்ச நீதிமன்றத்தில் வெளியிட்டுள்ளது.

சர்வதேச நாடுகளுக்கு இயக்கப்படும் விமானங்களின் 7 விமானிகளின் ஆவணங்கள் போலி எனவும், 5 பேர் பத்தாம் வகுப்பு தோல்வியுடன் கல்விக்கு முழுக்கு போட்டவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

மட்டுமின்றி உரிய ஆவணங்களை இதுவரை சமர்ப்பிக்காமல் பணியில் இருந்த 50 ஊழியர்களை இடைநீக்கம் செய்துள்ளதாகவும் நீதிமன்றத்தில் பாகிஸ்தான் விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அரசு பேருந்துகளை இயக்கவே தகுதியற்ற இவர்கள் விமானிகளாக, பயணிகளின் உயிரை பணயம் வைத்திருப்பதாக நீதிமன்றம் குற்றஞ்சாட்டியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை 4321 ஊழியர்களின் கல்வித்தகுதி உள்ளிட்ட ஆவணங்களை பரிசோதித்து வருவதாகவும், 498 விமானிகளின் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பிக்க கோரியுள்ளதாகவும் விமான போக்குவரத்து அதிகாரிகள் பாகிஸ்தான் நீட்ஜிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்