ரகசிய காதலனுக்கு ஆபாச குறுஞ்செய்தி... சுற்றுலா சென்ற இடத்தில் மாயமான இளம் தாயார்: வெளியான பகீர் தகவல்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

மத்திய தரைக்கடல் பகுதியில் குடும்பத்துடன் சுற்றுலா சென்ற இரண்டு பிள்ளைகளின் தாயார் மாயமான விவகாரத்தில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த தாயார் கொல்லப்பட்டு பெட்டிக்குள் அடைத்து கடலில் வீசியிருக்கலாம் என்ற தகவல் பொலிசாரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனா நாட்டவரான 38 வயது Xing Lei Li கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10 ஆம் திகதியில் இருந்தே மாயமாகியுள்ளார்.

இவர் தமது அயர்லாந்து கணவரான Daniel Belling மற்றும் இரு குழந்தைகளுடன் மத்திய தரைக்கடல் பகுதியில் சுற்றுலா சென்றுள்ளார்.

கொலை குற்றம் சாட்டப்பட்டுள்ள கணவர் பெல்லிங், தாம் தமது மனைவி கிரேக்க நாட்டு துறைமுகத்தில் வைத்து கப்பலில் இருந்து வெளியேறியதை நேரடியாக பார்த்ததாக தெரிவித்துள்ளார்.

மட்டுமின்றி டப்லின் எம்50 சாலையில் அவர் சுங்கவரி செலுத்தியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மட்டுமின்றி பெல்லிங் இத்தாலிய சிறையில் கைதியாக இருந்த நாட்களில் டப்லினில் உள்ள அவரது குடியிருப்பின் பூட்டு மாற்றப்பட்டுள்ளது எனவும் தெரியவந்துள்ளது.

இதனிடையே Xing Lei Li மாயமாவதற்கு அவரது காதலனாக இருக்கலாம் எனவும், அவர் தற்போது உயிருடன் இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

மட்டுமின்றி Xing Lei Li மொபைலில் இருந்து ஆபாச குறுஞ்செய்திகள் பல அனுப்பப்பட்டுள்ளதாகவும், அந்த நபர் அயர்லாந்து நாட்டவர் எனவும் தெரியவந்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்