இந்தோனேஷியா சுனாமி: எரிமலை குறித்து வெளியான திடுக்கிடும் தகவல்

Report Print Fathima Fathima in ஏனைய நாடுகள்

இந்தோனேஷியாவில் சமீபத்தில் ஏற்பட்ட சுனாமிக்கு 281 பேர் பலியாகினர், இச்சுனாமியை ஏற்படுத்திய எரிமலையில் மூன்றில் இரு பகுதி சரிந்துள்ள திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தோனேஷியாவில் தொடர்ந்து சில நாட்களாக புகைந்து கொண்டிருந்த அனக் கிரகட்டோவா எரிமலை கடந்த வாரம் சீற்றமடைந்தது.

இதன் காரணமாக சுமத்ரா தீவின் தெற்கு பகுதி மற்றும் ஜாவா தீவின் மேற்கு கடற்கரையோரப் பகுதிகளை ஆழிப்பேரலைகள் தாக்கியதில் 281 பேர் பலியாகினர்.

இந்நிலையில் அனக் கிரகட்டோவா எரிமலையை செயற்கைகோள் உதவியுடன் ஆய்வு செய்ததில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

அதாவது, எரிமலையின் சீற்றம் காரணமாக பெரும்பகுதி சரிந்துவிட்டது தெரியவந்துள்ளது, பழைய படங்களையும், தற்போதைய படங்களையும் ஒப்பிடுகையில் மூன்றில் இரு பகுதி சரிந்து விட்டது, இதனாலேயே சுனாமி ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்