மீட்பு பணியின்போது மலையில் மோதிய ஹெலிகாப்டர்: தீப்பிடித்து எரிந்து நொறுங்கிய அதிர்ச்சி வீடியோ

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

ஐக்கிய அமீரகத்தில் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த ஹெலிகாப்டர் மலையில் மோதி சுக்குநூறாக நொறுங்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐக்கிய அமீரகத்தின் ராஸ் அல்-கைமாவில் உள்ள ஜெபல் ஜெய்ஸ் மலைக்கு அடுத்து அடுத்து உள்ள மலைப்பகுதியில் ஒருவர் சிக்கிக்கொண்டதாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்தது.

அவரை மீட்பதற்காக 4 பேர் கொண்ட குழுவினர், அபுஸ்டாவெஸ்ட்லண்ட் AW139 ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டனர்.

அப்போது கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர், திடீரென அங்கிருந்த மலையில் மோதி தீப்பிடித்து எரிந்தது.

இதில் பயணம் செய்த 4 பேருமே இறந்து விட்டதாக எமிரேட்ஸ் நியூஸ் ஏஜென்சி தகவல் வெளியிட்டுள்ளது.

அதில் மூன்று பேரின் உடல் மீட்கப்பட்டுள்ளதாகவும். மற்ற ஒருவரின் உடலை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்