ஒரு வாரத்தில் பிறந்தநாள்: தந்தைக்கு சர்ப்ரைஸ் கொடுக்க சென்ற மகளுக்கு நேர்ந்த சோகம்

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

தந்தைக்கு கிறிஸ்துமஸ் பரிசளிப்பதற்காக ஆசையாக விமானத்தில் செல்ல முயன்ற மகள், விமான நடைபாதையில் இருந்து தவறி விழுந்து இறந்துள்ள சோக சம்பவம் அயர்லாந்தில் நடந்துள்ளது.

அயர்லாந்து நாட்டை சேர்ந்த 28 வயதான ஜூடித் கூக்லன் என்ற பெண், கிறிஸ்துமஸ் விழாவில் தன்னுடைய தந்தைக்கு சர்ப்ரைஸ் பரிசளிக்க நினைத்துள்ளார்.

அதன்படி கடந்த 23ம் தேதி ஆலிக்கன்-எல்செ விமான நிலையத்தில், விமானத்தில் ஏறுவதற்காக நடைபாதையில் சென்றுகொண்டிருந்த ஜூடித் திடீரென தடுமாறி கீழே விழுந்து இறந்துள்ளார்.

அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வாய்த்த பொலிஸார், 18 மீட்டர் உயரத்திலிருந்து கீழே விழுந்ததால் ஜூடித் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

ஆனால் மனைவியை விமான நிலையத்தில் இறக்கிவிட்டு சென்ற ஜூடித் கணவருக்கு தாமதமாகவே இந்த சோக செய்தி சென்றடைந்தது.

இந்த நிலையில் மனைவியின் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ள கணவன், இன்னும் ஒரு வாரத்தில் ஜூடித் பிறந்தநாளை கொண்டாட திட்டமிட்டிருந்ததாக வேதனை தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers