உலகின் மிக மோசமான விமான சேவை நிறுவனங்கள்: வெளியான பட்டியல்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

சர்வதேச விமான சேவை நிறுவனங்களில் பயணிகளால் கடும் சச்சரவுக்கு உள்ளாகும் விமான சேவை நிறுவனங்களில் Ryanair முதலிடத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சர்வதேச அளவில் பரவலாக பயன்படுத்தப்படும் விமான சேவை நிறுவனங்களில் Ryanair சேவையும் ஒன்று.

ஆனால் குறித்த விமான சேவை விமானங்களிலேயே அதிகமாக பயணிகள் மது போதையில் பிரச்னையில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.

இந்த விமான சேவை நிறுவனத்தின் விமானங்களில் பயணப்படும் 17 சதவிகித பயணிகள் கடந்த ஆண்டில் மட்டும் மது போதையில் பிரச்னை செய்கின்றனர் என ஆய்வு ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த வரிசையில் Thomas Cook விமான சேவை நிறுவனம் இரண்டாம் இடத்தில் உள்ளது. இதில் 15 சதவிகித மக்கள் பிரச்னையில் ஈடுபடுகின்றனர்.

மூன்றாவது இடத்தில் 14 சதவிகிதத்துடன் TUI விமான சேவை நிறுவனமும், 13 விழுக்காடுடன் easyJet விமான சேவை நிறுவனமும் உள்ளது.

இருப்பினும் இந்த விமான சேவை நிறுவனங்கள் பிரச்னையில் ஈடுபடும் பயணிகளை விமான நிலையத்திலேயே கண்டுகொண்டு நடவடிக்கையும் மேற்கொண்டு வருகிறது.

பயணிகள் மோசமாக நடந்துகொள்ளும் விமான சேவை நிறுவனங்கள்:

  1. Ryainair - 17 per cent
  2. Thomas Cook - 15 per cent
  3. TUI - 14 per cent
  4. easyJet - 13 per cent
  5. Jet2 - 11 per cent
  6. Emirates - 8 per cent
  7. Virgin Atlantic - 8 per cent
  8. British Airways - 7 per cent
  9. Flybe - 5 per cent
  10. Norwegian - 5 per cent

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...