இரத்தக் கண்ணீர் வடிக்கும் அந்தமான்வாசி: காரணம் புரியாமல் விழிக்கும் மருத்துவர்கள்

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

அந்தமானைச் சேர்ந்த ஒருவருக்கு கண்ணில் இருந்து இரத்தம் வழிந்து கொண்டே இருக்கும் நிலையில், எதனால் இரத்தம் வழிகிறது என்பதைக் கண்டுபிடிக்க முடியாமல் மருத்துவர்கள் தலையை சொறிந்து கொண்டிருக்கிறார்கள்.

பெயர் வெளியிட விரும்பாத அந்த 22 வயது நபர் கண்ணில் இருந்து இரத்தம் வழிந்ததால் அதிர்ச்சியுற்ற அவர் மருத்துவர்களிடம் சென்றார்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவரது இரத்தம் முதல் பல விடயங்களில் ஆய்வக சோதனைகளை மேற்கொண்டார்கள்.

ஆனால் பரிசோதனைகளின் முடிவுகள் அவரிடம் எந்த பிரச்சினையும் இல்லை என்றன. கடைசியில் அவரது கண்ணில் இரத்தம் வடிவதற்கு காரணம் தெரியவில்லை என்று ரிசல்ட் எழுதி முடித்தார்கள் மருத்துவர்கள்.

மருத்துவ உலகில் haemolacria என்று அழைக்கப்படும் கண்களில் இரத்தம் வழியும் பிரச்சினையின் பின்னணியில், Willerbrand disease என்னும் மரபியல் நோய், டெங்கு ஜூரம், எலிக்காய்ச்சல் என பல காரணங்கள் இருக்கலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

ஒரு வேளை அது கண்ணீர் சுரப்பிகளில் புற்றுநோய் ஏற்படுவதற்கான அறிகுறியாகக் கூட இருக்கலாம் என்று கூறும் மருத்துவர்கள், கண்களில் பாக்டீரியத் தொற்று, கண்ணில் அடிபடுதல் போன்றவையும் கூட இரத்தக் கண்ணீருக்கு காரணமாக இருக்கலாம் என்கின்றனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...